இஸ்லாமியர்களின் அரணாக பா.ஜ.க விளங்கும்¸
தமிழகத்தின் முதல்வரை பா.ஜ.கதான் தீர்மானிக்கும்
திருவண்ணாமலையில் இப்ராஹிம் அதிரடி பேச்சு
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் பா.ஜ.கவிற்கு ஆதரவாக பிரச்சாங்களை மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல சட்ட திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சார யாத்திரையை இப்ராஹிம் மேற்கொண்டுள்ளார். திருவண்ணாமலைக்கு நேற்று இரவு இந்த யாத்திரை வந்தது. இன்று காலை திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் கட்சியின் மாநில தலைவர் இப்ராஹிம் பேசினார். அவர் பேசியதாவது¸
சில கயவர்களின் கெட்ட எண்ணத்தினால் மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடம் தோறும் ரூ.6ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு ரூ.110 கோடியை கொள்ளையடித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர். இந்தி ஏதோ தவறான மொழி மாதிரி ஸ்டாலின்¸ இளைஞர்களை தூண்டி விடுகிறார். ஒரு சில சினிமா நடிகர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு பேசுகின்றனர்.
தமிழ்¸ தமிழ் என குதிக்கும் ஸ்டாலின் என்னோடு இலக்கிய சுத்தமாக துண்டு சீட்டு இல்லாமல் அரை மணி நேரம் பேச முடியுமா? துண்டு சீட்டை வைத்து பிழைப்பு நடத்தும் நீங்கள் பிரதமர் மோடியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி இந்தியை கட்டாய பாடமாக நடத்தி வருகின்றனர். அவரது பேரக்குழந்தைகள் இந்தி கற்றுள்ளனர். தமிழகத்தில் நீங்கள் மட்டும் அறிவாளியாக இருக்க வேண்டும்¸ மற்றவர்கள் கேன பயலாக இருக்க வேண்டுமா?
குஜராத்தில் 3ஆயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கும்¸ மோடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கோர்ட்டே சொல்லி விட்டது. அதே குஜராத்தில் 1969ம் ஆண்டு 6ஆயிரம் முஸ்லீம்களை கொன்ற காங்கிரசுக்கு ஏன் இஸ்லாமியர்கள் அடிமையாக இருக்கிறீர்கள்? அதை பற்றி ஏன் இஸ்லாமிய தலைவர்கள் பேசவில்லை? திமுகவுக்கு சொம்பு தூக்கி நாலைந்து எம்.எல்.ஏ சீட்டிற்காக இஸ்லாமிய சமூகத்தை பலிகடா ஆக்குவதா?
இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமாக உள்ள மெக்கா¸ மெதீனாவாவில் வேறு யாராவது ஆக்கிரமித்தால் ஒத்துக் கொள்வீர்களா? அயோத்தியில்தான் ராமஜென்ம பூமி உள்ளது என வரலாறும்¸ புராணமும் சொல்கிற நிலையில் அந்த இடத்தை இஸ்லாமியர்கள் விட்டு தரணுமா? இல்லையா? யாரோ ஒரு மொகலாய மன்னன்¸ பாபர் பரம்பரையில் வந்தவன் அங்கிருக்கிற கோயிலை இடித்து விட்டு பள்ளி வாசலை கட்டி அது 450 ஆண்டுகள் இருந்து விட்டால் நியாயமாகி விடுமா? மற்ற மதத்தின் நம்பிக்கையை மதிக்க வேண்டுமா? இல்லையா?
பாஜக வந்து விட்டால் முஸ்லீம்களுக்கு ஆபத்து என இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய இளைஞர்களையும்¸ ஜமாத் தலைவர்களையும் தூண்டி விடுகின்றனர். பாஜக தொண்டர்கள்தான் இஸ்லாமிய மக்களுக்கு அரணாக இருப்பார்கள் இதுதான் உண்மை. தமிழகத்தில் முதலமைச்சர் யார் என்பதை பாஜகதான் தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு வியாபாரிகளிடமும்¸ பொது மக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி பா.ஜ.கவிற்கு ஆதரவு தருமாறு கேட்;டுக் கொண்டார்.
தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு¸ திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பாஜக சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் முஹம்மது யாசீன்¸ மாவட்ட துணைத்தலைவர்கள் இறைமாணிக்கம்¸ முருகன்¸ கவிதா¸ மாவட்டச் செயலாளர்கள் பானு நிவேதிதா¸ திருவண்ணாமலை மத்திய ஒன்றிய தலைவர் அருணாச்சலம்¸ வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணி¸ விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ்¸ நகர பொதுச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.