Homeசெய்திகள்மாஸ்டர் படம் வெற்றி பெற பசு தானம்

மாஸ்டர் படம் வெற்றி பெற பசு தானம்

 மாஸ்டர் படம் வெற்றி பெற 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 
பசு தானம் வழங்கி விஜய் ரசிகர்

ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்” திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று இத்திரைபடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில் இந்த படம் வெற்றி பெறவும்¸ 5மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறக்கப்பட்டிருப்பதற்கும்¸ நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தார் நீடுழி வாழவும் திருவண்ணாமலை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பசு மாடுகள் தானமாக வழங்கப்பட்டது. 
மாஸ்டர் படம் வெற்றி பெற பசு தானம்

அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன் 2 பசு மாடுகளை கோவில் மணியக்காரர் செந்தில் முன்னிலையில் கோசாலை பாதுகாவலர் குமாரிடம் வழங்கினார். அப்போது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.

See also  புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!