Homeஆன்மீகம்திருவண்ணாமலை:ரூ.5 கோடியில் பைரவருக்கு கோயில்

திருவண்ணாமலை:ரூ.5 கோடியில் பைரவருக்கு கோயில்

ஆவூரில் ஸ்ரீ மஹாகாலபைரவர் கோயில்

திருவண்ணாமலை அடுத்த ஆவூரில் 5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ஸ்ரீ மஹாகாலபைரவர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு யாகம் இங்கு சமீபத்தில் நடைபெற்றது. 

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார். வீரத்தீர செயல்களை செய்யும் போது சிவபெருமான் பைரவர் திருக்கோலத்தில் தோன்றுவார்.  தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவரான கால பைரவர் சனியின் குருவாகவும்¸ பன்னிரன்டு ராசிகள்¸ எட்டு திசைகள்¸ பஞ்ச பூதங்கள்¸ நவகிரகங்களையும்¸ காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கருதப்படுகிறார். 

இந்த காலபைரவருக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு முன்பே அமைய பெற்ற சிவனின் திருவகதீஸ்வரர் கோயில் அமைந்துள்ள தலமான ஆவூரில் 5 ஏக்கர் நிலத்தில் ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஷிவம் பவுண்டேஷன் அறக்கட்டளை மூலமாக ஸ்ரீ மஹா காலபைரவஞானபீடம் திருப்பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.  சில நாட்களுக்கு முன்பு காலபைரவரை பிரதிஷ்டை செய்வதற்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.  

ஆவூரில் ஸ்ரீ மஹாகாலபைரவர் கோயில்

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மகா கால பைரவர் பீட நிர்வாகி பரமனந்த சுவாமிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். யாகத்தை பிரபல ஜோதிடர் திண்டுக்கல் சூரிய நாராயணன் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் முக்கிய பிரமுகர்களும்¸ சிவனடியார்களும் கலந்து கொண்டனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை நாகசக்தி பீடம் பரமனந்தல் ஏழுமலை¸ செஞ்சி திருமுருகன் சுவாமிகள்¸ காளியம்மன் கோயில் நிர்வாகி சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர். 

பரமனந்த சுவாமிகள் தனது அருளுரையில்¸ காலத்தை வென்றவர்¸ காலங்களை கடந்து நிற்பவர் என்பதாலேயே கால பைரவர் என்றழைக்கப்படுகிறார். மெய்ப்பொருளை உணரமுடியாது. நம்முள்ளே இரண்டறக் கலந்திருக்கும் ஜோதிமயமான இறையை உணர சற்குருவின் மூலம் தியானம் செய்து நம்முள்ளத்தைக் கடந்தால் மட்டும் ஆத்மஞானம் அடைய முடியும். குரு : ‘கு’ என்றால் இருட்டு. ‘ரு’ என்றால் அகற்றுபவர். நம்முள்ளே இருக்கும் அஞ்ஞான இருளை அகற்றுபவரே குரு. தியானம் : ‘தி’ என்றால் பேரறிவு¸ ‘யானம்’ என்றால் பயணம். தியானம் என்பது பேரறிவு எனும் மெய்ப்பொருளை உணரும் உள்முகப் பயணம். கடவுள் : ‘கட’ என்றால் கடந்து¸ ‘உள்’ என்பது மனத்தை உள்முகம் திருப்ப வேண்டும்¸ உள்ளத்தை கடக்க வேண்டும். கடந்தால் அதுவே கடவுள் நிலை. நாம் என்ன செய்ய நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் நாம் எதற்காகப் பிறந்தோமோ அது நடந்தே தீரும். ஞானத்திலேயே எல்லாம் அடக்கம். ஞானசித்தியே சித்தியாகும். இப்பிரபஞ்சத்திலே புதிதாய் தோன்ற ஏதுமில்லை. இருப்பதை அறியாமல் வாழ்வதே நம் அறியாமை. காரணமின்றி எந்தவொரு காரியமுமில்லை ஆத்மாவின் ஞானத்தை அடைவதற்கு தியானம் இன்றியமையாதது. தியானத்தை இடையறாது பயிற்சி செய்தால் எண்ணங்கள் அமைதிபடுத்தப்படும். மனம் ஒருமுகப்பட்ட பிறகு ஞானம் தானே வரும். எவன் ஒருவன் வாழ்க்கையின் மிக மிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவனே இறவா புகழ் உடையவன். மற்றவரெல்லாம் வெறுமனே இவ்வுலகில் உலவுகிறார்கள் அல்லது மூச்சுவிடும் வரை வாழ்கிறார்கள்.

See also  சூரிய கிரகணம்-அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி

சிவவழிபாடு என்பது மிகவும் எளிதான செயல் அல்ல. அது ஒரு மாபெரும் தவமாகும். காரணம் சிவவழிபாட்டிற்கு பல தடைகளும்¸ இடையூறுகளும் நிச்சயம் உருவாகும். அத்தகைய சோதனைகளைத் தாண்டிதான் சிவவழிபாடு என்பது சாத்தியமாகும். மேலும்¸ இயற்கையாக அமைந்த கர்மவினைகளும் ஒரு காரணமாகும். பொதுவாக கூறுவதுண்டு விதியை மதியால் வெல்லலாம் என்று. மதி என்பது பிறை சூடிய எம்பெருமானை மட்டும் குறிக்க வில்லை. தென்முக கடவுள் தட்சணாமூர்த்தியையும்¸ பைரவ பெருமானையும் குறிக்கும். இவ்விருவரை வணங்கி  வழிபட்டால் மட்டுமே சிவவழிபாடு சித்திக்கும்.

ஸ்ரீ மஹாபைரவரை மனதால் ஸ்மரித்து அவரின் துணையோடு இறைப்பணி செய்து பிறவிப்பேறு அடைவோம் என்றார்.

மகா கால பைரவர் பீட நிர்வாகி பரமனந்த சுவாமிகள்

அவரிடம் மகா கால பைரவர் பீடம் எதற்காக அமைக்கப்படுகிறது¸ ஆவூரில் அமைக்கப்படுவதன் நோக்கம் குறித்து  கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்…¸

என்னுடை குலதெய்வமான ஸ்ரீ பூர்ணபுஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் (சிவன்¸ விஷ்ணு¸ மஞ்சனீஸ்வரர் அவதாரம்) ஆலயம் நிர்மாணிக்க எண்ணியிருந்தேன். அப்போது பகவான் ரமணமகரிஷி தவயோகம் கொண்ட திருவண்ணாமலை விருபாக்ஷா குகையில் 2013ம் வருடம் (கார்த்திகை மாதம் மகாதீபத்திருநாள்) தியான நிலையில் இருந்த போது  குருவாக்கினில் உதித்ததே ஸ்ரீ மஹாகாலபைரவ ஞானபீடம்.

ஆவூரில் 33 அடி உயரத்தில் அமைய உள்ள மஹாகாலபைரவரின் தோற்றம்

பிரபஞ்சத்தில் இனி நிகழப்போகும் பேரழிவுகளில் இருந்தும்¸ இயற்கை சீற்றங்களில் இருந்தும் தடுத்தாட்கொள்ளவே ஸ்ரீ மஹாகாலபைரவர் பீடம் அமைக்கப்படுகிறது.33 அடி உயரத்தில்  மஹாகாலபைரவர் விஸ்வரூப அவதாரமெடுப்பது இங்கு மட்டும்தான் என்பது சிறப்பாகும். 2037 லிருந்து 82000 ஆண்டுகள் சித்தர்கள்தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆளப்போகிறார்கள்.

See also  முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

மக்கள் பக்தி¸ ஞானம்¸ முக்தி எனும் உண்மை நெறியினின்று வழிதவறிப்போகும் போதெல்லாம் ஞானிகள் தோன்றச் செய்வார்கள். அவர்கள் மொழி¸ செயல் வழிகளால் மக்களின் காரியங்களை நெறிப்படுத்தி¸ கலங்கரை விளக்கையொப்ப மக்களுக்கு சேவை செய்து மெய்ந்நெறியைக் காண்பிப்பார்கள். இங்கு அமைக்கப்படும் பீடத்தில் பழங்கால¸ வேதகால குருகுல முறைப்படி தியான¸ யோக¸ மந்திர¸ தந்திரயோகம் அனைத்தும் ஞானவேட்கை கொண்ட அனைவருக்கும் இயல்பாகவே கிடைக்கும். 

இப்பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்த அனைத்து ஜீவான்மாவிலும் தெய்வீகத் தன்மை இருக்கிறது. அதை மலரச் செய்வதே ஸ்ரீ மஹா காலபைரவ ஞானபீடத்தின் இலட்சியமாகும். நமது கர்மவினைகளைக் களைய ஒரே தீர்வு காலபைரவர் வழிபாடு. காலபைரவ வழிபாடு கைமேல் பலன் என்பது ஆன்மிக உலகில் வழங்கும் பொன் மொழியாகும். ஸ்ரீ மஹாகாலபைரவரின் திருவடி சரணடைந்தாலே நம் கர்மவினைகள் களையப்பெற்று வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று ஞானமடைவர் என்பது உறுதி. காலபைரவரின் அருள் பெற்றால் எத்தனை ஜென்மவினைப்பயனும் நொடிப் பொழுதில் சீரமைக்கப்படும். 

வினைப்பயன் நீங்கிடின் முக்தி என்பது சாத்தியமே. வாழ்க்கையை முழுவதுமாக தானிருக்கும். அது வாழும்போதே கிடைக்கும் என்பது ஆனந்தம் அல்ல.. பேரானந்தம்…வழிபாட்டின் மூலம் நவக்கிரஹ பாதிப்பில் இருந்தும் விட முடியும். தன் கர்மவினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லாப் பெருநிலையடைய தகுதி படைத்தவர்கள் மட்டுமே காலபைரவர் வழிபாடு செய்ய முடியும்¸ அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீ மஹாகாலபைரவர் ஞானபீடத்தின் நோக்கமாகும் என்றார். 

See also  சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஸ்ரீ மஹாகாலபைரவர் ஞானபீடத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற டிசம்பர் 7ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆன்மிக அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி¸ நிதியுதவியை தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

முகவரி: ஷிவம் பவுண்டேஷன்

13¸ 2வது மாடி¸ மடிப்பாக்கம் மெயின் ரோடு¸

மடிப்பாக்கம்¸ சென்னை – 600091. 

போன் : 9962738799 – 8124277759. email- [email protected]

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!