அக்டோபர்¸ நவம்பரில் பலத்த மழை
சென்னை பலத்த சேதத்தை சந்திக்கும்
காகபுஜண்டர் கணிப்பு
திருவண்ணாமலை அடுத்த பெரிய குளத்தில் காகாஸ்ரமம் ஆதிசக்தி பீடத்தை நிறுவியுள்ள கொல்லிமலை சித்தர் காகபுஜண்டர் டாக்டர் ஸ்ரீதருமலிங்க சுவாமிகள் 2020ம் ஆண்டில் வைரஸ் நோய் ஒன்று உலகை தாக்கும் என 2000ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியிலும்¸ ஜெயா டிவியிலும்¸ சிங்கப்பூர் வானொலியிலும் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சித்த மருத்துவத்தை கொண்டு உயிர்கொல்லி வைரசான கொரோனாவை விரட்டி விடலாம் எனவும் அவர் கூறியது போல் கொரோனாவை குணப்படுத்துவதிலும்¸ கொரோனா வராமல் தடுப்பதிலும் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் உள்ள மகா சொர்ணகால பைரவருக்கு உலக நன்மை வேண்டியும்¸ கொரோனா தொற்று நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மக்களுக்கு கிடைக்க வேண்டியும்¸ இயற்கை சீற்றங்கள் குறையவும் சென்ற பவுர்ணமியன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இம்மாத பவுர்ணமி தினத்தன்று மகா கணபதிக்கும்¸ சித்தர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜைகளை காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் நடத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
கொரோனா கை ஓங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் தெய்வ சக்தியின் துணையால் இதை விரட்டியடிக்க முடியும். இதற்காகத்தான் காகாஸ்ரமம் ஆதிசக்தி பீடத்தில் கொரோனா ஒழிய சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 8ந் தேதி முடிவுக்கு வரும். 9ந் தேதி முதல் கொரோனா நோய் தாக்கம் இருக்காது. கொரோனாவிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும். உலகம் சுபிட்சம் அடையும். விவசாயம்¸ தகவல் தொழில்நுட்பத்துறை¸ பத்திரிகை துறை செழிக்கும். ரியல் எஸ்டேட் துறை சரிவை சந்திக்கும். தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் வருகிற அக்டோபர்¸ நவம்பர் மாதம் பலத்த மழை பெய்யும். கடும் மழையினால் சென்னை பலத்த சேதத்தை சந்திக்கும். இது மகா பைரவரின் வாக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.