Homeசெய்திகள்இளைஞர் படுகொலை கீழ்பென்னாத்தூரில் பதட்டம்.கடைகள் அடைப்பு

இளைஞர் படுகொலை கீழ்பென்னாத்தூரில் பதட்டம்.கடைகள் அடைப்பு

வாய்த்தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். கொலையான இளைஞருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும்¸ அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களும் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் கடைகள் அடைக்கப்பட்டன.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் குருபரன் வயது 20 பிஏ படித்துள்ளார்.நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள சிக்கன் கடை ஒன்றில் இவருக்கும் கீழ்பென்னாத்தூரில் மரக்கடை வைத்திருக்கும் தீனா என்றவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  

இந்த தகராறு முற்றி குருபரனின் தலையில் தீனா கல்லால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதில் படுகாயமடைந்த குருபரன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்தனர்.

குருபரன் கொலைக்கு நீதி கேட்டும் கொலை செய்தவர் மீது கடுமையான பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரியும் குருபரனின் உறவினர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் முன்னாள் எம்பி துரை, முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன், காளிதாஸ் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தை இன்று காலை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் கீழ்பென்னாத்தூரில் பதட்டம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. பிறகு அவர்கள் ஊர்வலமாக சென்று புறவழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சென்னை திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கீழ்பென்னாத்தூரில்தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!