Homeஆன்மீகம்இடைக்காடர் குரு பூஜை - கொரோனா ஒழிய சிறப்பு யாகம்

இடைக்காடர் குரு பூஜை – கொரோனா ஒழிய சிறப்பு யாகம்

ஸ்ரீ இடைக்காடர் குரு பூஜை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கோசாலையில் 18 சித்தர்கள் குடிலை மூலிகை ரத்தினம் வி.டி.கோவிந்தராஜ் அமைத்துள்ளார். இங்கு நடைபெற்ற இடைக்காடர் குரு பூஜை விழாவில் உயிர் கொல்லி நோயான கொரோனா ஒழிய சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது.

இந்த குடிலில் கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீஅகத்திய முனிவர்¸ ஸ்ரீகமலமுனி¸ ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீபச்சமுனி¸ ஸ்ரீசட்டைநாதர்¸ தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீபதஞ்சலி¸ ஸ்ரீகொங்கணர்¸ கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீசிவ வாக்கியம்¸ ஸ்ரீகருவூரார்¸ மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீதிருமூலர்¸ மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீபாம்பாட்டி¸ ஸ்ரீஇடைக்காடர்¸ ஸ்ரீதன்வந்திரி¸ மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீகோரக்கர்¸ ஸ்ரீபோகர்¸ மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீசுந்தரானந்தர்¸ விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீவான்மீகர்¸ துலாம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீகுதம்பை¸ சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஸ்ரீராமதேவர் ஆகிய 18 சித்தர்களின் சிலைகள் அமைந்துள்ளது.

ஸ்ரீ இடைக்காடர் குரு பூஜை

சித்தர்களை வணங்கினால் கஷ்டங்கள்¸ சிரமங்கள்¸ குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் தீ வினைகள்¸ பாவ வினைகள்¸ திருமணம் கைகூடுதல்¸ பிள்ளை பேறு¸ தொழில் மேன்மை என பல்வேறு பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கையாகும். 

See also  சிவராத்திரி: 10 கிலோ சலங்கை கட்டி ஆவேச நடனம்

திருவண்ணாமலையில்; இந்த குடிலில் மட்டும் 18 சித்தர்கள் ஒரே இடத்தில் இருப்பதால் தினமும்¸ பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது ராசிக்கான சித்தரை மனதார நினைத்து வழிபடுகின்றனர். 

ஸ்ரீ இடைக்காடர் குரு பூஜை

இங்கு ஸ்ரீஇடைக்காடர் அவதார பெருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி இடைக்காடர் சித்தர் 18 சித்தர் குடில் நிறுவனர் வி.டி.கோவிந்தராஜ் தலைமையில் இடைக்காடருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முதலில் கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. இடைக்காடர் சந்தன அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலையில் கொரோனா¸ மற்றும் வறட்சி ஒழியவும்¸ இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இடைக்காடரை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து 18 சித்தர் குடில் நிறுவனர் வி.டி.கோவிந்தராஜ் கூறுகையில் தியானம்¸ மருத்துவம்¸ ஆன்மீகம் என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கிய சித்தர்கள்¸ செம்பு¸ கல்¸ மண் என எதையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம் தெரிந்தவர்கள். கூடுவிட்டு கூடு பாயும் முறை¸ நீரில் நடத்தல்¸ காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துக்கள் தெரிந்தவர்கள். சித்தர்களுக்கு பிடித்த பூஜை முறைகளை செய்வது¸ சிவபஞ்சாட்சரத்தை சொல்வது¸ பௌர்ணமி வழிபாடு போன்ற நம்முடைய செயல்கள் அவர்களிடம் நம் ஆன்மாவை அழைத்து செல்லும். இவற்றை பின்பற்றி இந்த குடிலில் 18 சித்தர்களுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது என்றார்.

See also  2022 குருபெயர்ச்சி - மேஷ ராசிக்கான பலன்கள்

விழாவையொட்டி காலை முதல் இரவு வரை இடைவிடாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!