Homeஆன்மீகம்4 1/2டன் பூக்களால் அண்ணாமலையார் கோயில் அலங்கரிப்பு

4 1/2டன் பூக்களால் அண்ணாமலையார் கோயில் அலங்கரிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நாளை நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வண்ண¸ வண்ண பூக்களாலும்¸ மின் அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மகா தீபம் 

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய நிகழ்வான பரணி மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

பூலோகத்திலுள்ள சிவத் தலங்களுக்குள்ளே நடுநாயகமாக விளக்கும் திருவண்ணாமலையென்னும் திருத்தலம் நினைத்தவுடனே முக்தியைக் கொடுக்கத்தக்க சிறப்புடையதாக உள்ளது.சமய உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். மூர்த்தி¸ தலம்¸ தீர்த்தம் என மூன்றாலும் சிறந்த இத்தலம்¸ ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரகமாகவும்¸ பஞ்சபூதத் தலங்களில் தேயுத்தலமாகவும் விளங்குகின்றது¸

லிங்கோத்பவ மூர்த்தி

இம்மலையே எட்டாத மலை என்ற பொருளில் அண்ணாமலை என்றும் இம்மலையின் பெயரே ஊர்ப் பெயராகவும் விளங்கி வருவதுடன்¸ சோதி மலையாகவும்¸ பொன் மலையாகவும்¸ கல் மலையாகவும் ஒவ்வொரு யுகத்திலும் மாறியது ஆகும். இங்கேஅயன்¸ திருமால் என்னும் இருவருடைய தருக்கைத் தவிர்க்க¸ அவர்களால் அளவிடமுடியாத சிவலிங்கத் திருவுருவில் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக¸ லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சியளிக்கிறார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

இத்திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் யாவும் சிறப்புடையனவாகும். இதில் இத்திருத்தலத்தில் நடைபெறும் திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா மிகச் சிறப்புடையது ஆகும். மூவுலகிலும் திருமேனியாகத் காட்சி கொடுத்துத் தீப ஜோதியாகக் காட்சி கொடுக்கும் இடம் இத்தலமாகும். உலகம் முழுவதும் உள்ளமக்கள் இத்திருநாளன்று “அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு இறைவனைக் காணும் நன்னாளாகும்.

See also  குழந்தை வரம் தரும் ஓகூர் ஒத்தாண்டேஸ்வரர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
கோயிலுக்குள் நோய்தொற்றை தடுக்க கொசு மருந்து அடிக்கப்பட்டது. 

வருத்தத்தில்  பக்தர்கள்

நாளை இத்திருநாளாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கார்த்திகை தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து பார்க்கும் வகையில் தொலைக்காட்சி¸ உள்ளுர் கேபிள் டிவி¸ சமூக ஊடகங்கள் மற்றும் திருக்கோயில் இணையதளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனாலும் தீபஜோதியை நேரில் தரிசிக்க முடியாத வருத்தத்தில் பல லட்சம்  பக்தர்கள் உள்ளனர். 

மலை உச்சியில் மகாதீப கொப்பரை

நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபமும்¸ மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கோயிலில் அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன் சன்னதி மற்றும் விநாயகர் சன்னதி¸கொடிமரத்திற்கு முன்னால் உள்ள தீபதரிசன மண்டபம் ஆகியவை ரோஜா¸ சாமந்தி போன்ற வண்ண¸வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  

ரூ.11 லட்சம் 

லிங்கம்¸சிவனின் கண்கள்¸ சூலம்¸ தீபம் எரிவது போன்ற  விளக்குகள் ஆகியவை பூக்களால் ஜோடிக்கப்பட்டுள்ளன. 4 1/2  டன் பூக்களை கொண்டு  கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதற்காக ரூ.11லட்சத்தை எஸ்.பி.ஆர் குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர். மேலும் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் வண்ண¸ வண்ண பூக்களாலும்¸ மின் அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது. 

See also  திருவண்ணாமலை - வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை
திருவண்ணாமலை கோயிலில் பஞ்சமூர்த்திகள் உற்சவம்
இன்று இரவு நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் உற்சவம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!