Homeஅரசியல்திருவண்ணாமலையில் இன்று பா.ஜ.க வெற்றிவேல் யாத்திரை

திருவண்ணாமலையில் இன்று பா.ஜ.க வெற்றிவேல் யாத்திரை

 

திருவண்ணாமலையில் பா.ஜ.க வெற்றிவேல் யாத்திரை
தயார் நிலையில் போலீஸ் வாகனங்கள் 

திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் பா.ஜ.க வெற்றி வேல் யாத்திரையை யொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி எனும் தலைப்பில் தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றி வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் ஆங்காங்கே தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடந்து வருகிறது. இதனால் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் வெற்றிவேல் யாத்திரையில் பாஜக தலைவர் முருகன் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியை யாத்திரை என்று குறிப்பிடாமல் பொதுக்கூட்டம் என குறிப்பிட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று 17.11.2020 செவ்வாய்கிழமை  மாலை 4 மணிக்கு அண்ணாசிலை அருகே மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் வர்த்தக பிரிவு மாநில துணைத் தலைவர் தணிகைவேல் வரவேற்புரையில்¸ மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ்¸சேகர்¸.சதீஷ்குமார்¸ மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறப்புரையாற்றுகிறார். மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன்¸ மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

ஆனால் இந்த பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசிய பிறகு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

See also  எ.வ.வேலுவை ஆதரித்து சாவல்பூண்டி பிரச்சாரம்

இதற்காக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜன் வழிகாட்டுதலின்படி¸ வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் என்.காமினி மேற்பார்வையில்¸ திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில்¸ ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்¸ ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர்¸ 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள்¸ வேலூர்¸ ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஓம்¸ ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி¸ நிறைவு கொள் என்பதாகும்.ஆமென் என்கிற கிறிஸ்துவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள். சாந்தமடை என்பதாகும். இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி¸ சமத்துவம் என்பதையே உணர்த்துவதாக கூறப்பட்டுள்ளது. மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி¸ மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டு இன்று கட்டுரை வெளிவந்துள்ளது. இதற்கு பா.ஜ.க தரப்பில் இன்று நடைபெற உள்ள வெற்றி வேல் யாத்திரையில் பதிலடி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!