Homeஆன்மீகம்தீப விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும்- பா.ஜ.க

தீப விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும்- பா.ஜ.க

 

திருவண்ணாமலையில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேச்சு

டாஸ்மாக்கை திறந்த அரசு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பதா? 

கயவர் கூட்டத்தை ஓட¸ஓட  காவி கூட்டம் விரட்டியடிக்கும்

பா.ஜ.க கை காட்டுபவர்தான் முதலமைச்சர்

திருவண்ணாமலையில் பா.ஜ.க தலைவர் முருகன் பேச்சு 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

கொரோனா காலத்தில் மக்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள்¸ செவிலியர்கள்¸ சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை பாராட்டவும்¸ கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை ஒழிக்கவும்¸ மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்து கூறவும் கடந்த 6-ந் தேதி திருத்தணியில் பா.ஜ.கவின் வெற்றி வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. 

2வது கட்ட யாத்திரை

இந்த யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காததால் தடையை மீறி யாத்திரைக்கு செல்லும் பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்து அன்றைய தினமே விடுதலை செய்து வருகின்றனர். திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை சென்னை¸செங்கற்பட்டு¸ காஞ்சிபுரம்¸ ராணிப்பேட்டை¸ வேலூர்¸திருப்பத்தூர்¸ ஓசூர்¸கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் நடந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது கட்ட வேல்யாத்திரை திருவண்ணாமலையில் தொடங்கியது. 

இதற்காக இன்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு  தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸ 

திருவண்ணாமலையில் பா.ஜ.க வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்¸ அக்னி ஸ்தலம்¸ 18 சித்தர் இருந்த ஸ்தலம் என பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. திருவண்ணாமலைக்கு முக்கிய சிறப்பு என்னவென்றால் கிரிவலம். இந்த கிரிவலத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கண்ட இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. ஆன்மிக மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். பக்தர்கள் வருகைதான் கோயிலுக்கு முக்கியம். கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான  திருவிழாவாகும். எனவே இத்திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.  

See also  ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 8 கோயில் கும்பாபிஷேகம்

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் தி.மு.க

அசுரர்களை அழித்து தேவர்களை காப்பாற்றியது போல் முருகன் நம்மை காப்பாற்றுவார். இது மாற்றத்திற்கான நேரம். கந்தசஷ்டியை அவமதித்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளார். அவர் மட்டுமின்றி அவர்களது கூட்டணி கட்சியினரும் உள்ளனர். கந்தசஷ்டியை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவே இந்த யாத்திரை நடக்கிறது. கருப்பர் கூட்டத்தை¸ கயவர் கூட்டத்தை ஓட¸ஓட இந்த காவி கூட்டம் விரட்டியடிக்கும். நரேந்திர மோடி ஊழல் அற்ற நல்லாட்சி செய்து வருகிறார். அதனால் தான் தற்போது பா.ஜ.க.வின் பின்னால் இளைஞர்களும்¸ சகோதரிகளும் வருகின்றனர்.  மத்திய அரசின் அதிகபடியான திட்டங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டத்தில் 2 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு 6ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. 4.5லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி இலவச கேஸ் வழங்கிப்பட்டிருக்கிறது.  

பா.ஜ.க கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் 

வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலையிலிருந்து நமது சகோதரர்¸ சகோதரிகளை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதுவரை நாம் ஓயக்கூடாது.  தமிழகத்திலிருந்து அதிகபடியான எம்.எல்.ஏ.க்களை கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணிதான் ஆட்சியை பிடிக்க போகிறது. நாம் கை காட்டுபவர்தான் முதலமைச்சராக இருப்பார். இந்த யாத்திரை எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து செல்லும். வருகிற 7-ந் தேதி இந்த யாத்திரை திருசெந்தூரில் முடிவடைய உள்ளது. 

See also  12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

இவ்வாறு அவர் பேசினார். 

திருவண்ணாமலையில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேச்சு

இதைத் தொடர்ந்து அவர் தடையை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்றார். அப்போது மேடை மீது ஏறி போலீசார் முருகனை கைது செய்தனர். அவருடன் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன்¸ மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன்¸ வர்த்தக பிரிவு மாநில துணைத் தலைவர் தணிகைவேல்¸ திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆர்.சேகர்¸ கே.ரமேஷ்¸ எம்.சதீஷ்குமார்¸ மாவட்ட பொருளாளர் ஜெ.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் வி.ரமேஷ் பி.பாஸ்கரன்¸ ஏஜி.காந்தி¸ எஸ்.விஜயன்¸ எஸ்.தணிகைவேல்¸ ஜெ.செந்தில்குமார்¸ போளுர் சி.ஏழுமலை¸ ஆர்.பிரதீஷ்குமார்¸ அருணை ஆனந்தன்¸ கே.ஆறுமுகம் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 250 பெண்கள் உள்பட 1200 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சில மணி நேரங்களில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

பாஜக சார்பில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரையை யொட்டி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில்¸ வேலூர் டிஐஜி என்.காமினி மேற்பார்வையில்¸ திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்¸ ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர்¸ 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள்¸ வேலூர்¸ ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!