திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள வேடந்தவாடி கிராமத்தில் 2000-ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கிழக்கு பார்த்தவாறு வேதநாயகி அம்மனுடன் வேதநாதஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு தல விருச்சமாக வில்வமும் தீர்த்தமாக பிருகு தீர்த்தமும் திகழ்கின்றன.
இத்தலநாயகியான வேதநாயகி அம்மனை திருமணம் ஆகாத பெண்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வந்து எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் மாங்கல்ய பலம் கூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மக்களுக்கு இறை வழிபாட்டை உணர்த்தவும் தரும நெறிகளை கடைபிடிக்கவும் இமயம் முதல் குமரிவரை கோவில்களை கட்டி வழி பட உணர்த்தினார்கள் சம்புவராயமன்னர்¸ நரசிம்ம பல்லவர்¸ ராஜராஜசோழன் காலத்தில் கட்டிய கோவில்கள் கலை நயமிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட கோயில் ஒரு பண்பாட்டு மையாக திகழாமல் பசிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் அந்த நாளில் விளங்கியது.இத்தகைய சிறப்பு மிக்க கோவில் முகலாய பேரரசின் படையெடுப்பின் போது தங்க சிலைகள்¸ வைரம்¸ வைடுரீயம்¸ மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினங்களும் கொள்ளையடிக்கப்பட்டு கோவில் கோபுரம் மதிச்சுவர்கள் கருவறைகள் என அனைத்தும் அனைத்தும் தகர்க்கப்பட்டு சிதிலமடைந்திருந்தது. ஒரு காலத்தில் வேதநாத ஈஸ்வரனுக்கு விளக்கேற்ற ஆளில்லாமல் இருந்தது இப்போது ஊர் மக்கள் உதவியுடன் திருப்பணி குழுவினர் கடந்த 2015-ஆம் ஆண்டு பாலாலயம் செய்து தொடர்ந்து திருப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்த கோயிலில் ஒன்பது அடி உயர குரு தட்சணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள ஈஸ்வரனை வேதங்கள் வழிப்பட்டதால் குருதட்சணமூர்த்திக்கு தனி ஆலயம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இது குருதோஷ பரிகாரதலமாக அமைகிறது. ஆலங்குடிக்கு இணையானதாக விளங்குவதால் வட ஆலங்குடி என்று போற்றப்படுகிறது.
இங்கு வருகிற 15ந் தேதி குருபெயர்ச்சி மகாயாகம் நடக்கிறது. இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியதாவது¸
வேதநாத ஈஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு குரு யோகதட்சணாமூர்த்தி திருக்கோயில் விஸ்வரூப தரிசனம் அளிக்கின்ற குரு பரிகார தலமாக விளங்குகிறது. 15ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 9.36 மணிக்கு ஸ்ரீ குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனை முன்னிட்டு லட்சார்ச்சனையும்¸ சிறப்பு பரிகார மஹா யாகமும் மகாகுரு அகஸ்தியரின் சீடர் திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் தலைமையில் நடக்கிறது.
இந்த குரு பெயர்ச்சியால் மேஷம்¸ மிதுனம்¸ சிம்மம்¸ துலாம்¸ விருட்சிகம்¸ மகரம்¸ கும்பம் ஆகியவை பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ஆகும். பரிகார ஹோமம் சேவைக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ரிஷபம்¸ கடகம்¸ மீனம்¸ கன்னி¸ தனுசு ஆகிய ராசிகள் லட்சார்ச்சனை செய்ய வேண்டிய ராசிகளாகும். இதற்கு அர்ச்சனை சேவைக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படுகிறது. அன்று இரவு குடும்பத்திற்கு 12 அகல்விளக்குகள் ஏற்றி குரு பகவானை வழிபட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு 9500739980¸ 9487228424¸ 99527 68785¸ 6380606565 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
– பா.சாய்செந்தில் மற்றும் ப.பரசுராமன்