Homeஅரசு அறிவிப்புகள்புகையில்லா தீபாவளி: தி.மலை கலெக்டர் வேண்டுகோள்

புகையில்லா தீபாவளி: தி.மலை கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி மற்றும் புகையில்லா தீபாவளியை கொண்டாடும்படி பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங்களில் சொல்லப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் தீபங்களுடன் தீபாவளியினை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

செவிட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு 

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும்¸ தொடர் ஓசை நிரந்தனமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சு10ழல் மாசினை தடுக்கும் வண்ணம் பொது நல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதி மன்றம்¸ 2018 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதன்படி காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

See also  ஆப்பிரிக்கன் மீன் வளர்த்தால்..கலெக்டர் எச்சரிக்கை

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்¸ பள்ளி¸ கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இப்பொருள் குறித்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 23.10.2018 அன்று வழங்கிய உத்திரவில்¸ 2015-ல் வழங்கிய உத்திரவினை சரிவர அமல்படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

விழிப்புணர்வு பிரச்சாரம் 

அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் பொது மக்கள் மற்றும் மாணவ¸ மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும்¸ விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்திரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள்¸ விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

1.காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

See also  தி.மலை:கொரோனா 2வது அலை தடுக்கப்பட்டுள்ளது

2.125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

ஒளி தீபங்களால் கொண்டாடுவோம்

 தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம்¸ நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த  தீபாவளியினைக் கொண்டாடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. 

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம் 

இவ்வாறு கலெக்டர் கந்தசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ரூ.1கோடி மதிப்புள்ள பட்டாசுகள் குவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பாக பட்டாசு ரூ.1கோடி அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு நேற்று முதல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்றது.

இந்த விற்பனையை நேற்று காலை திருவண்ணாமலை துராபலித் தெருவில் இயங்கி வரும் கற்பகம் கூட்டுறவு விற்பனை சிறப்பங்காடியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

See also  திருவண்ணாமலையில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் ஸ்டாண்டர்டு¸ அரசன் வசந்தா¸ வனிதா போன்ற முன்னணி நிறுவனங்களிடமிருந்து தரமான பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிப்ட் பாக்ஸ் ரூ.440 முதல் ரூ.1405 மதிப்பு வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!