Homeசெய்திகள்காவு வாங்கும் கல்குவாரி-அடுத்தடுத்து உயிர்பலி

காவு வாங்கும் கல்குவாரி-அடுத்தடுத்து உயிர்பலி

கல்குவாரி குட்டையில் மூழ்கி சாவு 

திருவண்ணாமலை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துக்க நிகழ்ச்சி 

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் காலனியைச் சேர்ந்தவர் தருமன். அதிமுகவில் உள்ளார். இவரது அண்ணன் கணேசன் நேற்று முன்தினம் இறந்து விட்டார். நேற்று அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. அவரது துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்தனர். பெங்களுரிலிருந்து சுரேஷ்(வயது 40) என்பவர் தனது உறவினர்களுடன் வந்திருந்தார். 

இன்று காலை குளிப்பதற்காக பெங்களுரிலிருந்து வந்தவர்கள் வெளியில் சென்றனர். அப்போது அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீர் இருப்பதால் அங்கு குளிக்க செல்லுமாறு அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் சுரேஷ் அவரது அண்ணன் மகள் ஹரணி(14) உள்பட 7க்கும் மேற்பட்டோர் குட்டி யானை வாகனத்தில் அந்த குவாரிக்கு சென்றனர்.  

காப்பாற்ற முயன்றவரும் பலி

ஹரணி குளித்துக் கொண்டிருந்த போது கால்தவறி குட்டையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கவே உடன் சென்றவர்கள் கூச்சல் போட்டனர். அவரை காப்பாற்ற சுரேஷ் தண்ணீரில் குதித்தார். ஆனால் 2 பேருமே நீரில் மூழ்கினர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 1 மணி நேரம் போராடி சுரேஷ் மற்றும் ஹரணியை பிணமாக மீட்டனர்.  குட்டையில் இருந்த தண்ணீரில் பாதிக்கு மேல் சேரும்¸ சகதியுமாக இருந்ததனால் அதில் சிக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

கல்குவாரி குட்டையில் மூழ்கி சாவு

துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பிணமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

See also  பள்ளி திறப்பை விநாயகர் சதுர்த்தியை ஒப்பிடாதீர்கள்

திமுக பிரமுகரும் பலி

2 பேரை பலி வாங்கிய குட்டை இருந்த கல்குவாரியை நக்கீரன் என்பவர் டெண்டர் எடுத்திருந்தார். டெண்டர் முடிந்து விட்டதால் தற்போது அந்த குவாரி கவனிப்பாரற்று உள்ளது. 1மாதத்திற்கு முன்பு திமுக பிரமுகர் ஒருவர் அதே குட்டையில் மூழ்கி இறந்துள்ளார். எனவே மேலும் உயிர்பலி ஏற்படாமல் தடுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!