காலாவதியான பொருட்கள் பறிமுதல் |
தீபாவளியையொட்டி திருவண்ணாமலையில் உள்ள ஸ்வீட் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுத்தத்தை கடைபிடிக்காத கடைக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வருகிற 14ந் தேதி சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடைகள்¸ பட்டாசுகள்¸ பலங்காரங்கள் இந்த தீபாவளியில் முக்கிய பங்கு வகிக்கும். துணி தரமானதா?¸ சாயம் போகுமா? என பார்த்து வாங்கும் மக்கள் பலகாரங்களை வாங்கும் போது கடைக்காரர் தருவதை எந்த கேள்வியையும் கேட்காமல் வாங்கிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
கையுறை அணிந்திருக்க வேண்டும். உணவு பண்டம் தயாரிக்கும் இடம்¸ சுத்தமாகவும்¸ ஈ மொய்க்காமலும் இருக்க வேண்டும். இனிப்பு¸ காரம் தயாரிக்கும் தொழிலாளர்கள்¸ கைகளை சோப்பால் கழுவிய பிறகு¸ பணிகளை துவக்க வேண்டும். பணியின் போது¸ குட்கா¸ பாக்கு¸ வெற்றிலை¸ புகையிலை¸ புகைபிடித்தல்¸ எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்¸ பலகாரம் தயாரிக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்¸ அதிகப்படியான செயற்கை வண்ணத்தை தவிர்க்க வேண்டும். பலகாரம்¸ உணவு பொருள் தயாரித்ததும்¸ பயன்படுத்திய உபகரணங்கள்¸ பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து¸ பூஞ்சை பிடிக்காமல் வைக்க வேண்டும் இப்படி பல விதிமுறைகள் பலகாரம் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவற்றை நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.
பேக்கரியில் சோதனை |
ரகசிய தகவல்
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பண்டிகைக்கு முன்பே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தருவதில்லை. கடைகாரர்களை எச்சரிக்கும் வண்ணம் அறிவிப்பையும் வெளியிடுவதில்லை. இந்நிலையில் ரகசிய தகவல் வந்ததையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைலேஷ்¸ சுப்பிரமணியன்¸ ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை பஜாரில் உள்ள கடைகளில் இன்று ஆய்வு செய்தனர்.
ரூ.2ஆயிரம் அபராதம்
ஐயங்கார் பேக்கரி¸ சரவணா ஸ்வீட் மற்றும் அர்ச்சனா ஸ்வீட் உள்பட பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பலகாரங்களில் அதிகளவில் கலர் பவுடர் சேர்க்கப்பட்டு உள்ளதா? காலாவதியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் சோதனை செய்தனர். அப்போது சமையல் அறை மற்றும் கடையை சுத்தமாக வைக்கவில்லை என்று 2 கடைகளுக்கு அலுவலர்கள் நோட்டீசு மற்றும் ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் காலாவதியான பிஸ்கட்¸ பிரட்¸கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்வதை கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலையில் ஸ்வீட் கடை மட்டுமன்றி சில உணவு கூடங்களும் சுத்தத்தை பேணி காக்காமல் உள்ளன. பெயருக்கு மட்டுமே ஆய்வு நடத்தி விட்டு கடமை முடிந்தது என உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இல்லாமல் உணவு நிறுவனங்களில் அடிக்கடி சோதனை நடத்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.