Homeசெய்திகள்கொலை சம்பவம் எதிரொலி-ரவுடிகள் 16 பேர் அதிரடி கைது

கொலை சம்பவம் எதிரொலி-ரவுடிகள் 16 பேர் அதிரடி கைது

திருவண்ணாமலையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரவுடிசம்¸ கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலையைச் சேர்ந்த பங்க்பாபு(47) கடந்த 3ந் தேதி திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள டீ கடையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை அரங்கேற்றி விட்டு தப்பி ஓடுவது கேமரா பதிவுகளில் தெரிய வந்தது. 

கொலையாளிகளை பிடிக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி¸ இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர்¸ ஹரிகிருஷ்ணன்¸ பாரதி¸ விநாயகமூர்த்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் கொலையாளிகளை தேடி பெங்களுர்¸ சென்னை¸ கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் முகாமிட்டுள்ளனர். 

பங்க்பாபுவால் 2017ம் ஆண்டு அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கவே தனது கணவரை கொலை செய்திருப்பதாக பங்க்பாபுவின் மனைவி ஆனந்தி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கனகராஜின் மைத்துனர் விவேகானந்தன்(30) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவர் தலைமையில் பெங்களுரைச் சேர்ந்த கூலிபடையினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரவுடிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிரடி நடவடிக்கையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 பேரிடம் நன்னடத்தைக்கான பிணையம் பெறப்பட்டது. 

இந்த 16 பேரும் ரவுடிசம்  மற்றும் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டவர்கள். அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். நன்னடத்தைக்கான பிணையம் பெறப்பட 20 பேரும் பல்வேறு வழக்குகளில் சிறைக்குச் சென்று வந்தவர்கள்.  20 பேரையும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஆஜர்படுத்தி நன்னடத்தைக்காண பிணையம் பெறப்பட்டது. (இவர்கள் நன்னடத்தையை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயும்)

மேலும் ரவுடிசத்திற்க்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!