Homeஅரசு அறிவிப்புகள்தடுத்து நிறுத்தப்பட்ட 228 பெண் குழந்தைகள் திருமணம்

தடுத்து நிறுத்தப்பட்ட 228 பெண் குழந்தைகள் திருமணம்

தடுத்து நிறுத்தப்பட்ட 228 பெண் குழந்தைகள் திருமணம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 228 பெண் குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்¸ பெரும்பாக்கம் சாலையில் அமைந்துள்ள அலைகள் குழந்தைகள் இல்ல வளாகத்தில் இன்று (29.12.2020) புதியதாக கட்டப்பட்டுள்ள சிறுமிகளுக்கான இல்லத்தை கலெக்டர்  சந்தீப் நந்தூரி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) கே. பார்வதி¸ டெர்ரி டெஸ் ஹோம்ஸ் கோர் தலைவர் மற்றும் இயக்குநர் ஆர். செழியன்¸ துணை இயக்குநர் திருமதி. ஏ. பி. சர்மிளா¸ குழந்தை நலக் குழு உறுப்பினர்கள்¸ ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது¸

இந்த இல்லத்தின் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில்¸ கல்வி கற்கும் இடத்தில் உள்ளீர்கள். இனிமேல் உங்களுக்கு கல்வி தான் வாழ்க்கையின் எதிர்காலம். அடுத்த 10,15 வருடங்களில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என சிந்தித்து செயல்படும் நேரமாகும். இந்த நேரத்தில் நீங்கள் இரட்டிப்பு முயற்சியடன் படித்தால்¸ பிற்காலத்தில் நன்றாக இருக்க முடியும். குழந்தைகளின் முதல் கவனம் கல்வியில் தான் இருக்க வேண்டும். மேலும்¸ குழந்தைகள் அனைவரும் படிப்புடன் சேர்த்து விளையாட்டு¸ யோகா¸ நடனம் உட்பட மற்ற நடவடிக்கைளிலும் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களது முழு திறமைகளும் வெளியே வரும்.

தடுத்து நிறுத்தப்பட்ட 228 பெண் குழந்தைகள் திருமணம்

குழந்தைகள்¸ இளைஞர்கள் 100 சதவீத  முயற்சியுடன் அனைத்திலும் பங்கேற்பு செய்ய வேண்டும். நமது நாட்டில் பல்வேறு தொழில்முறை வாய்ப்புகள் உள்ளது. நல்ல வேலை கிடைத்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்¸ அதற்கு படிப்புடன் சேர்த்து உங்களுக்கு பிடித்த பிரிவுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள்¸ இளைஞர்கள் தினசரி நாளிதழ்களை தினமும் ஒரு 15,30 நிமிடங்கள் ஒதுக்கி படிக்க வேண்டும். உலகத்தில் நடக்கும் சமூக¸ அரசியல்¸ விளையாட்டு உட்பட அனைத்து நிகழ்வுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 

திருவண்ணாமலை 1098 சைல்டு லைன் மூலம் இந்த ஆண்டு 228 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்கால குடிமகன்கள்¸ நீங்கள் நினைத்தால் இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். இன்று முதல் நீங்கள் அனைவரும் உங்களின் மொழி¸ தொடர்பு¸ ஆளுமை¸ பேச்சு என அனைத்திலும் உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் எதிர்கால வெற்றிகரமான இளைஞர்களாக நீங்கள் உருவாக வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இணைய வழியில் நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பை மற்றம் பாராட்டு சான்றிதழை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். முன்னதாக யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!