Homeசெய்திகள்பங்க் பாபு கொலையில் கூலி படையினர் 6 பேர் கைது

பங்க் பாபு கொலையில் கூலி படையினர் 6 பேர் கைது

பங்க் பாபு கொலை வழக்கில் கூலி படையினர் 7 பேரில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கனகராஜ்

2017ம் ஆண்டு திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரம் அருகில் முன்னாள் அதிமுக நகர செயலாளர் கனகராஜ்¸ திமுக பிரமுகர் பங்க் பாபுவால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இடம் வாங்குவது சம்பந்தமான முன் விரோதமே இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிந்தது. 

இந்த கொலைக்கு பழிவாங்க திட்டம் தீட்டிய கனகராஜின் மனைவி ஞானசுந்தரி¸ மைத்துனர் விவேகானந்தன் ஆகியோர் கூலி படையை ஏவி பங்க் பாபுவை கடந்த 3ந் தேதி தீர்த்து கட்டினர். 

கூலி படை

வேலூரைச் சேர்ந்த கூலி படையினர் 6 பேர்¸ சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும்¸ இந்த கொலைக்கு கூலியாக ரூ.50 லட்சம் பேசப்பட்டு முதல் கட்டமாக ரூ.30 லட்சம் தரப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

கனகராஜின் மனைவி ஞானசௌந்தரி (32)¸ அவரது தாய் ராணி(58)¸ அவரது தாய் மாமன் சுரேஷ் (32) ஆகிய 3 பேரை 6ந் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் வேங்கிக்கால் வினோத்குமார்¸ சிவராத்திரி மடத் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து விவேகானந்தன்(30)¸ பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(25)¸ ஊசாம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ்(29) ஆகிய 3 பேரையும்  போலீசார் 9ந் தேதி கைது செய்தனர். கூலி படையினர் 7 பேரை வலைவீசி தேடி வந்தனர். 

ஜெயிலில் அடைப்பு 

இந்நிலையில் நேற்று முன்தினம் கூலி படையைச் சேர்ந்த வேலூர் கொணவட்டம் அம்பேத்கர் சிலை பகுதியைச் சேர்ந்த ஹரி (23)¸ வேலூர் முள்ளி பாளையத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (18)¸ வேலூர் காட்பாடி குருவி சுரேஷ் (33) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

வேலூர் மாவட்டம் பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த் விபின் (36)¸ முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமு (26)¸ சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் (எ) மூசா (27) ஆகிய 3 பேரையும் தனிப்படையினர் கைது செய்து நேற்று இரவு மாஜூஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

தப்பி ஓடியவர்கள்

நேற்று இரவு கைது செய்யப்பட்டவர்கள் பங்க் பாபுவை வீச்சரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நால்வரில் 3 பேர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒன்று அல்லது இரண்டு பேர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!