திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை ரூ.90 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. இதையொட்டி கலெக்டர் சந்தீப் நந்தூரி சாத்தனூர் அணையில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீடடர் தூரத்தில் உள்ள சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தில் பெரிய அணைகளில் ஒன்றாகும். விவசாயத்துக்காக தண்ணீரை தேக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்த அணை திருவண்ணாமலை நகர் மட்டுமன்றி தண்டராம்பட்டு பகுதி கிராமங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த அணையில் ஒரு காலத்தில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. அந்த அளவுக்கு பொதுமக்களை அதிகம் கவரும் வகையில் அங்கு பூங்கா¸ அணையை பார்வையிடும் வகையில் ரயில்;¸ பல்வேறு வகையான பறவைகள்¸ வண்ண மீன் அருங்காட்சியகம்¸ மான் பூங்கா¸ முதலைப்பண்ணை¸ நீச்சல் குளம்¸ படகு சவாரி போன்றவைகள் இருந்தன. இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருபவர்கள் ஆர்வமுடன் சாத்தனூர் அணைக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர். பிறகு படிப்படியாக இங்கு பராமரிப்பு குறைந்ததால் தற்போது முதலைப்பண்ணை¸ பறவைகள் மட்டுமே சொல்லக்கூடிய வகையில் உள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு ரூ.3 கோடிக்கு சாத்தனூர் அணை புதுப்பிக்கும் பணி நடந்தது. இப்பணிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரவில்லை. காணும் பொங்கல் அன்று மட்டுமே சாத்தனூர் அணையில் கூட்டம் கூடும். மற்ற நாட்களில் கூட்டம் வராது. சுற்றுலா பயணிகளை கவரும் வiயில் பழையபடி சாத்தனூர் அணையில் ரயில்கள்¸ படகு சவாரி விட வேண்டும்¸ நவீன பூங்காக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில் சாத்தனூர் அணையில் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தும் திட்டத்தில் உலக வங்கி நிதியின் கீழ் ரூ.90 கோடிக்கு அரசாணை பெறப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடியில் பூங்கா மறு சீரமைப்பு மற்றும் பூங்கா உட்கட்டமைப்பு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதையொட்டி சாத்துனூர் அணைக்கு பதவியேற்ற பிறகு முதன்முறையாக சென்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி ஒவ்வொரு பகுதியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் நீர்பிடிப்பு பகுதி நீர் வழிந்தோடியில் உள்ள 9 கதவுகள் உபரி நீர் போக்கில் உள்ள 11 கதவுகள் மற்றும் கூடுதல் உபரி நீர் போக்கில் உள்ள 11 கதவுகளையும். சாத்தனூர் அணையின் பூங்கா பகுதி¸ புனல் மின் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
குறிப்பாக நீர்வழிந்தோடிக்கு அடியில் உள்ள குகை போன்ற வடிகால் அமைப்பில் சென்று ஆய்வு செய்தார். நீர் வழிந்தோடியில் உள்ள 9 கதவுகள் மற்றும் உபரி நீர் போக்கில் உள்ள 11 கதவுகளை மாற்றுதல் குடியிருப்பு புதி;யதாக கட்டுதல்¸ கூடுதல் உபரி நீர் போக்கி முன்புறம் உள்ள மண்மேடுகள் அகற்றுதல்¸ பிக்கப் அணையின் அணுகு சாலை மேம்படுத்துதல் மற்றும் மிகை நீர் போக்கி கட்டுமானத்;திற்கு வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்;ச்சி வேலை வாய்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பில்; புதிய மதகு கட்டும் பணியினையும்¸ வரகூர் கிராமத்தில்; ரூ.60 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் மாதிரி பள்ளி கட்டுமான பணியினையும். கீழ்சிறுப்பாக்கத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேநீர் தேக்கும் தொட்டி கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
ஆய்வின்போது¸ திட்ட இயக்குநர்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா¸ உதவி இயக்குநர் அரவிந்த்¸ பொதுபணித்துறை செயற்பொறியாளர் மகேந்திரன்¸ உதவி செயற்பொறியாளர் அறிவழகன்¸ சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ்¸ ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தனிகாச்சலம்¸ திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.