திருவண்ணாமலை மலை உச்சயில் மகாதீபம் ஏற்றும் போதும்¸மலை உச்சியிலிருந்து தெரியும் கோயில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் புகைப்படங்களையும் இங்கே காணலாம்.
முக்திக்கு ஒரு மலை
காட்சிக்கு இனிய மலை¸ கண்டார் துயர் தீர்க்கு மலை¸ முந்தைப் பழவினைகள் முடிவுறச் செய்யும் மலை¸ எத்திசையும் தோற்று மலை¸ முக்திக்கு ஒரு மலை¸ நெஞ்சை இளக்கும் மலை¸ நெஞ்சத்துள் பேரின்பம் வளர்க்கும் மலை¸ தாயாய் சற்குருவாய் நின்ற மலை என்றெல்லாம் குரு நமசிவாயர் போற்றி பாடும் மலை திருவண்ணாமலையாகும்.
மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் மட்டுமே காணப்படும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவத்தில் இம்மலை காட்சியளிப்பதில்லை. ஒவ்வொருவிதமாகத் தோற்றம் தரும் இந்த மலை¸ ஏகன் அநேகனாகவும் தோற்றம் தருபவர் என்னும் தத்துவத்தை விளங்க வைக்கிறது.
குகைநமச்சிவாயர்
இம்மலையில் பயன்தரும் மரங்கள்¸ தீர்த்தங்கள்¸ சுனைகள் உள்ளன. மேலும் பல்வேறு குகைகள்¸ குகைநமச்சிவாயர் கோவில்¸ தண்டபாணி ஆசிரமம் போன்றவைகள் இருப்பது சிறப்பு. புகழ் வாய்ந்த இம்மலையில் 29ந் தேதி மகாதீபம் ஏற்றி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற 9ந் தேதி வரை 11நாட்கள் இந்த தீபம் எரிய விடப்படும்.
இந்நிலையில் மலைமீது மகாதீபம் ஏற்றும் நிகழ்வுகளும்¸ அங்கிருந்து பார்த்தால் தெரியும் திருவண்ணாமலை நகரமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.