Homeஅரசு அறிவிப்புகள்எய்ட்ஸ் நோயாளிகளை குறிவைக்கும் கொரோனா

எய்ட்ஸ் நோயாளிகளை குறிவைக்கும் கொரோனா

உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

உலக எய்ட்ஸ் தினம் 

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஸ்ரீ லட்சுமி சீனிவாச திருமண மண்டபத்தில் மாவட்ட எஸ்ட்ஸ் கட்டுப்பாடு அலகின் சார்பாக இன்று (01.12.2020) உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எய்ட்ஸ் நோயாளிகளின் பிள்ளைகள் மற்றும் தொற்று தாக்கியுள்ள பிள்ளைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயம் ஆகியவற்றை வழங்கினார். மேலும் எய்ட்ஸ் தடுப்பு பணியில் சிறப்பாக களப் பணியாற்றிய அரசு மருத்துவமனைகள்¸ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்¸ ஏஆர்டி¸ இரத்த வங்கி¸ தொண்டு நிறுவனங்கள்¸ சேவை மையங்கள்¸ ரோட்டரி சங்கம் ஆகியவற்றிற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயம் ஆகியவற்றையும் வழங்கி பேசினார்.

உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அவர் பேசியதாவது¸  

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மைய கருத்து “உலகளாவிய ஒற்றுமை¸ பொறுப்பை பகிர்ந்து கொள்ளுதல்”ஆகும். இந்நோய் ஒழிப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு¸ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

 6 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள்

இந்நோய் பாலியல் தொழில் செய்பவர்கள்¸ லாரி¸ கேப்¸ வேன் ஓட்டுநர்கள்¸ காசநோயாளிகளுக்கு  அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2¸71¸437 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 234 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு 0.13 சதவீதமாக இருந்தது தற்போது 0.11சதவீதமாக  குறைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இதில் 3500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் நோயின் பாதிப்பை 0 சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா நோய் அதிகமாக தாக்குகிறது. இதற்கு காரணம் இந்நோய் உள்ளவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து¸ சமூக இடைவெளி கடைபிடித்து¸ தங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

உலக எய்ட்ஸ் தின சமபந்தி போஜனத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

சமபந்தி போஜனம்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு அவர் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினார். 

இந்நிகழ்ச்சியில்¸ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் ஆர். மீரா¸ மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு)  கந்தன்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமீத்குமார்¸  மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் ஆர். கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!