அண்ணாமலையாரைப்பற்றி முதன்முதலாக படம் தயாரித்து வெளியிட்ட குழுவினர் நவகிரக நாயகன் என்ற புதிய படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு வருகிற 27ந் தேதி தொடங்குகிறது.
சிவபெருமானை வலம் வருதல்
மலையை வலம் வருதல் என்பது¸ சிவபெருமானை வலம் வருதல் ஆகும். எல்லா நன்மைகளும் நமக்கு கிட்டும் என்ற முறையில்தான் இதனை சான்றோர்கள் அமைத்து உள்ளனர். சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக தோன்றிய வடிவமே மலை ஆகும். இத்தலத்தின் சிறப்பே மலையே சிவலிங்கமாக அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி வருபவருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகத்துவம் உடையது எனப் புராணங்கள் கூறுகின்றன.
தல வரலாறு 2ம் பாகம் |
தல வரலாறு
இப்படி திருவண்ணாமலை தலத்தை பற்றிய சிறப்புகள் அடங்கிய புத்தகங்கள் ஏராளமாக வந்திருந்தாலும் கூட பாமரமக்களுக்கும் புரிய வகையில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்த குறையை போக்கிடும் வகையில் திருவண்ணாமலை மலை ஏறும் பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை செயலாளர் சித்தர் மகன் சீனிவாசன் 13 வருடங்களுக்கு முன்பு அருணாச்சல மகிமை என்ற தலைப்பில் திருவண்ணாமலையின் தல வரலாற்றை தயாரித்து வெளியிட்டார்.
இதையடுத்து அண்ணாமலை தீபம் என்ற பெயரில் 2ம் பாகமும்¸ 2007ம் ஆண்டு ஆதி அருணாசலம் என்ற பெயரில் 3ம் பாகமும் தயாரித்து வெளியிடப்பட்டது. இதில்தான் நடிகை அஞ்சலி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 பாகங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி சிவ பக்தர்களிடமும்¸ பொது மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றன.13 வருடங்கள் கழித்து இதே குழுவினர் நவக்கிரக நாயகன் என்ற பெயரில் புதியதாக தொடர் ஒன்றை தயாரிக்கின்றனர்.
அஞ்சலி அறிமுகமான தொடர் |
வாலைச்சித்தர்
ஒவ்வொரு பாகங்களும் ஒருமணி நேரம் என மொத்தம் 5 பாகங்களாக இப்படம் தயாரிக்கப்படுகிறது. வருகிற 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மலை ஏறும் பாதையில் தண்டபாணி ஆசிரமத்தில் சனிப்பெயர்ச்சி யாகங்கள் முடிந்த பிறகு காலை 11 மணிக்கு தீப ஒளி ஏற்றி படப்பிடிப்பை பிரம்மரிஷி¸ வாலைச்சித்தர் துவக்கி வைக்கிறார். தலைப்பு பாடலை சித்தர் மகன் சீனிவாசன் பாடுகிறார். கதை¸ திரைக்கதை¸ வசனம்¸ பாடல்¸ இசை¸ இயக்கம் ஆகியவற்றை எம். ராஜஜோதி மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு- மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ரவீந்திரன் மாரியப்பன்.
தொடக்க விழாவுக்கு தொழிலதிபரும்¸ சத்யா சில்க்ஸ் உரிமையாளருமான சத்ய.சிவக்குமார் தலைமை தாங்குகிறார். தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை தலைவர் எஸ்.டெல்லி குமார்¸ குரு டிராவல்ஸ் உரிமையாளர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் வி.சி.விஜய் சங்கர் கலந்து கொள்கிறார்.
8 கிரகங்கள்
இது குறித்து நவக்கிரக நாயகன் படத் தயாரிப்பாளர் சித்தர் மகன் சீனிவாசன் கேட்ட போது நவக்கிரகங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்ற கருவை வைத்து படத்தை தயாரிக்க உள்ளோம். அண்ணாமலையார் என்றால் சூரிய பகவான் ஆவார். அவரை அடக்கியதுதான் 8 கிரகங்களும். உலகத்தின் நுழைவு வாயில் திருவண்ணாமலை என்றார் ரமணர். நவகிரகத்தின் ஈர்ப்பு விசை கொண்டது திருவண்ணாமலை. நவகிரகங்களை மாற்றி அமைத்தவர் இடைக்காடர் சித்தர். அதனால்தான் ஞானிகளும்¸ சித்தர்களும் திருவண்ணாமலையை நோக்கி வருகின்றனர்.
அருணாச்சல மகிமை படகுழுவினர் |
மகிழ்ச்சியில் பக்தர்கள்
நவக்கிரக நாயகன் படம் புராணத்தையும்¸ விஞ்ஞானத்தையும் கலந்ததாக இருக்கும். இந்த கால மக்களுக்கு புரியும்படியாக படத்தை எடுக்க உள்ளோம். அடுத்த ஆண்டு சிவராத்திரி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு அண்ணாமலையாரைப் பற்றி புதியதாக படம் வெளிவரவிருப்பது பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.