Homeஅரசியல்ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு காரணம் பா.ஜ.க

ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு காரணம் பா.ஜ.க

ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு காரணம் பா.ஜ.க

பாரதிய ஜனதா மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து ரஜினியின் மனதையும் கெடுத்து உடல் நலத்தையும் கெடுத்துவிட்டது என திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி கூறினார். 

திருவண்ணாமலைக்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸

ஆன்மீகத்தில்  நாட்டம்

நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்¸ அரசியலில் அவருக்கு ஆர்வம் இல்லை என்று நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன்¸ காரணம் என்னவென்று சொன்னால் அவர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர். ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்ப மாட்டார்கள். 

1996ல் மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது தமிழ் மாநில காங்கிரசும் கருணாநிதியும் இணைந்து தேர்தலை சந்தித்து ஜெயலலிதாவை தோற்கடித்த அந்த நேரத்தில் நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்து முதலமைச்சராக வரக்கூடாதா என்று ரஜினிக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டது. எனக்கு அதில் விருப்பம் இல்லை என அப்போதே அவர் தெளிவாக சொல்லி விட்டார். அப்போது அவர் இதைவிட நல்ல உடல் நலத்தோடு இருந்தார் இதைவிட ரஜினிக்கு ரசிகர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது அப்போதே அரசியலை விரும்பாத ரஜினிகாந்த் இப்போது எப்படி அரசியலுக்கு வருவார். 

See also  திருவண்ணாமலையில் இன்று பா.ஜ.க வெற்றிவேல் யாத்திரை

பா.ஜ.கவிற்கு தோல்வி

இன்றைக்கு இருக்கிற ஒரு மிகப் பெரிய முக்கியத்துவம் என்னவென்றால் பாரதிய ஜனதா மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து ரஜினியின் மனதையும் கெடுத்து உடல் நலத்தையும் கெடுத்து விட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது பாரதிய ஜனதா கட்சிக்கு மகத்தான தோல்வி. பாரதிய ஜனதாவில் இராஜதந்திரிகள் சிலர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் இன்றைக்கு இருக்கின்ற மாநில அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வராமல் அதனை ரஜினி பெற்றுக்கொண்டால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கணக்கிட்டார்கள்¸ ஆனால் அது தவறான கணக்கு. அந்த கணக்கு பொய்த்து விட்டது¸ அது மட்டுமல்ல ரஜினி பாரதிய ஜனதா கட்சி விரித்த வலையில் இருந்து வெளியே வந்து விட்டார்¸ எனவே அந்த வகையில் ரஜினிகாந்த்க்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மோடி ஒரு சர்வாதிகாரி. 30 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கொட்டுகின்ற பணியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள்¸ டெல்லியில் நடக்கக்கூடிய விவசாயிகளுடைய போராட்டம் என்பது மகாத்மா காந்தி சொன்ன அகிம்சை வழியில் இன்றைக்கு வரைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது¸ நானறிந்த வகையில் உலகத்தில் எந்த ஒரு போராட்டமும் இந்த அளவிற்கு நடைபெற்றது கிடையாது¸ ஒத்த கருத்தோடு உறுதியான மனநிலையோடு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் அது டெல்லியில் நடக்கும் போராட்டம் தான்¸ இதை மோடி புறக்கணிக்கலாம், அதனுடைய விளைவு என்னவாகும் என்று சொன்னால் மக்கள் மோடியை புறக்கணிப்பார்கள்.

See also  கோபாலபுரத்து குடும்ப ஆட்சி அச்சுஅசல் திருவண்ணாமலையில்...

வாக்குகளை பெறுவதற்காக

பொங்கல் பண்டிக்கைக்கு தமிழக அரசு ரூ.2500 வழங்குவது என்பது மிகப் பெரிய ஊழல். விவசாயிகள்¸புயலால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே இதற்கான கோரிக்கைகளை பல காலங்களாக வைத்து ஏங்கித் தவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு  வழங்காத இந்த பணத்தை தற்போது மாநில அரசு அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு வழங்குகிறது என்று சொன்னால் நிச்சயமாக வாக்குகளை பெறுவதற்காக¸ ஏழை மக்களுடைய மனதை மாற்றுவதற்காக இந்த பணத்தை அவர்கள் வழங்குகிறார்கள்¸ இது மிகவும் தவறு. தேர்தல் கமிஷன் இதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்¸ தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் இந்த வேலையை செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் ஜி.குமார்¸ பி.செந்தமிழ்அரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!