திருவண்ணாமலை மாவட்டம் பழவேரி கிராமத்தில் மகளிர் குழு நடத்தும் பெட்ரோல் பங்க் கட்டப்பட்டுள்ளது. இந்த பங்க்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.
ரூ.30.00 லட்சம்
தமிழகத்திலேயே முதன் முறையாக மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் பெட்ரோல்¸ டீசல் சில்லரை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்கை மகளிர் சுய உதவிக் குழு வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது. குழுக்களின் பங்களிப்பு நிதி ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் இந்த பெட்ரோல் பங்க் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க்கின் நோக்கம்
பழவேரி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் மூலம் மகளிர் குழுக்கள் தங்களின் தலைமைத்துவம்¸ ஆளுமைத்திறன்¸ சமூக பொருளாதார நிலை உயர்வடையும்¸ பணியாளர்களாக மகளிர் குழுக்களைச் சார்ந்த பெண்கள் குறிப்பாக மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இருளர் சமூகத்தை சார்ந்த நபர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு நீடித்த¸ நிலைத்த வாழ்வாதாரம் ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தங்கள் உறுப்பினர் மகளிர் குழுக்களின் ஒப்புதல் பெற்று அவர்களின் இருப்பு நிதியில் இருந்து பங்களிப்பு தொகை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார அளவிலான கூட்டமைப்பிடம் வழங்கி பங்குதாரர்களாக செயல்படுவர்.
லாபம் எப்படி?
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அடிப்படை கட்டமைப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெட்ரோல்¸ டீசல் சில்லரை விற்பனை நிலையம் அமைத்து மகளிர் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கும். மேலும்¸ விற்பனைக்கு ஏற்ப கமிஷன் இக்கூட்டமைப்பிற்கு வழங்கப்படும் இவற்றைக் கொண்டு நிர்வாக செலவு பணியாளர் ஊதியம் மின் கட்டணம் போக தங்களது உறுப்பினர் குழுக்களுக்கும் கூட்டமைப்பு பங்குதாரர்களுக்கும் லாப பகிர்வு வழங்கப்படும். இத்தொழில் சமூக நிறுவனமாக மேற்கொள்வதன் மூலம் மகளிர் குழுக்களுக்கும்¸ கூட்டமைப்புகளுக்கும் தன்னம்பிக்கை பெற்று பல்வேறு தொழில்கள் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு நீடித்த நிலைத்த வாழ்வாதாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழுக்கள் சுய சார்பு நிலையை அடைய வழி வகுக்கும்.
கலெக்டர் ஆய்வு
புதிய பெட்ரோல் நிலையத்தினை கலெக்டர் சந்திப் நந்தூரி இன்று ஆய்வு செய்தார். தெள்ளார் ஊராட்சி ஒன்றியம்¸ மீசநல்லூர் கிராமத்தில்¸ பழங்குடியினர் நலத் திட்டம்¸ கனிமவள விருப்ப நிதி¸ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்¸ மாநில நிதிக்குழு மான்ய திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒருங்கிணைந்த 100 இருளர் குடியிருப்பு வீடுகள்¸ சமுதாயக் கூடம்¸ அங்கன்வாடி மைய கட்டிடம்¸ கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடம்¸ திறந்தவெளி கிணறு¸ மேநீர் தேக்கத் தொட்டி¸ சிமெண்ட்¸ தார் சாலை¸ உயர்கோபுர மின்வளிக்குகள்¸ குழந்தைகள் பூங்கா ஆகிய பணிகள் மற்றும் இருளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கு செங்கல்¸ கரி சு10ளை¸ மாட்டு கொட்டகை¸ பேப்பர் பைகள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இருளர் சமூகத்தினர் கட்டும் கோயிலின் பூமி பூஜையிலும் கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா¸ மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா¸ தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட செயலர்¸ அ.பிரேம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள்¸ மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.