Homeஅரசு அறிவிப்புகள்நீர்நிலைகளில் செல்பி வேண்டாம்-கலெக்டர் வேண்டுகோள்

நீர்நிலைகளில் செல்பி வேண்டாம்-கலெக்டர் வேண்டுகோள்

கலெக்டர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள்¸ ஏரிகள்¸ சிறு நீர்பாசன ஏரிகள் நிரம்பி வருவதால்  பொதுமக்கள்¸ இளைஞர்கள்¸ குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வேகமாக நிரம்பும் ஏரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள்¸ ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நீர்பாசன ஏரிகள் தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள்¸ ஏரிகள் மற்றும் சிறு நீர்பாசன ஏரிகள் தற்போதைய கொள்ளளவு வருமாறு¸

பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் அணைகள் விவரம்:

பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் ஏரிகள் விவரம்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சிறு நீர்பாசன ஏரிகள் விவரம்:

நீரின் ஓட்டம் அதிகரிக்கும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு மற்றம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள்¸ ஏரிகள்¸ சிறு நீர்பாசன ஏரிகள் தொடர்ந்து கனமழை காரணமாக நிரம்பி வருவதாலும்¸ நீரின் ஓட்டம் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க கூடும் என்பதாலும்¸ பொதுமக்கள்¸ இளைஞர்கள்¸ குழந்தைகள் உட்பட அனைவரும்¸ நீர்நிலைகளை கடக்கவோ¸ குளிக்கவோ¸ வேடிக்கை பார்கவோ¸ செல்பி புகைப்படம் எடுக்கவோ கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
மேலும்¸ தங்கள் கால்நடைகளையும் நீர்நிலைகளின் அருகில் செல்லாமலும்¸ கடக்காமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!