Homeசெய்திகள்மூதாட்டியை பலிகடாவாக்கி தப்பிய சாராய கும்பல்

மூதாட்டியை பலிகடாவாக்கி தப்பிய சாராய கும்பல்

மூதாட்டியை பலிகடாவாக்கிய சாராய கும்பல்

செங்கம் பகுதிகளில் டெல்டா தனிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் குடிசைக்குள் தரையோடு¸தரையாக புதைக்கப்பட்டிருந்த சாராய பேரல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம்¸ போதை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்க்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். உள்ளுர் போலீசுக்கு தகவல் கொடுத்தும் பயனில்லாததால் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். 

அதன்பேரில் தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்டா போர்ஸ் எனப்படும் அதிரடிப்படையினரைக் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அதிரடி வேட்டையை நடத்தி வருகிறார். சமீபத்தில் இந்த தனிப்படையினர் நடத்திய வேட்டையில் பேரல்¸ பேரலாக காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழித்தனர். இதே போல் போதையை உண்டாக்கும் குட்கா பொருட்களையும் பண்டல்¸ பண்டலாக கைப்பற்றினர். 

இந்நிலையில் செங்கம்  பகுதியில் சாராய விற்பனை ஜோராக நடப்பதாகவும்¸ அவை பதுக்கி வைக்கப்பட்டிக்கும் இடம் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி¸ தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி. அசோக் குமார் மேற்பார்வையில்¸ திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு டி.வி.கிரன்ஸ்ருதி தலைமையில்¸ டெல்டா தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ரெய்டு நடத்தினர். 

மூதாட்டியை பலிகடாவாக்கிய சாராய கும்பல்

காயம்பட்டு¸ வலையாம்பட்டு¸ தீர்த்தாண்டப்பட்டு¸ சென்னசமுத்திரம் பகுதியில்  சோதனை நடத்தப்பட்டது. காயம்பட்டு கிராமத்தில் ஒரு குடிசைக்குள் போலீசார் சென்று பார்த்த போது கள்ளச்சாராயம் ஊற்றப்பட்டிருந்த பேரல்கள் தரையோடு¸ தரையாக புதைக்கப்பட்டிருந்தது. அதன் மீது இருந்த மூடி யாரும் கண்டுபிடிக்காதவாறு சாதாரணமாக தரையில் கவிழ்த்து போல் இருந்தது.

தரையில் புதைக்கப்பட்டிருந்த 2 பேரல்களிலிருந்தும் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதையொட்டி அந்த குடிசையில் இருந்த சரோஜா (வயது 66) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து மாஜூஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் அங்கிருந்து சாராயத்தை விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்திய குடங்கள்¸ சிறிய கேன்கள்¸ பக்கெட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

கிறிஸ்துமஸ்¸ புது வருடப்பிறப்பு¸ பொங்கல் பண்டிக்கைக்காக ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிகளில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயம் செங்கம் பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூதாட்டியை பலிகடாவாக்கிவிட்டு தப்பிய சாராய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மூதாட்டியை பலிகடாவாக்கிய சாராய கும்பல்

தீர்த்தாண்டப்பட்டு கிராமத்தில் டைல்ஸ் போடப்பட்ட நவீன வசதிகள் கொண்ட புது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 108 மது பாட்டில்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த தீர்த்தாண்டப்பட்டைச் சேர்ந்த கதிர்வேல் (55)¸ சென்னம்மாள்(40)¸ வலையாம்பட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் (22)¸ சென்னசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (65) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!