Homeஆன்மீகம்மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம்

மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம்

மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேம்
அண்ணாமலையார் பாதம்

தேயுத்தலம்

சமய உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இது ஆறு ஆதாரத் தலங்களில் மணிப் பூரகமாகவும்¸ பஞ்சபூதத் தலங்களில் தேயுத்தலமாகவும் விளங்குகின்றது.

- Advertisement -

கயிலை மலையில் இறைவன் இருப்பதால் சிறப்பு. ஆனால் இங்கு மலையே சிவலிங்கமாக காட்சியளிப்பது மாபெரும் சிறப்பாகும். இம்மலைக்கு ‘அருணாசலம்’ என்ற பெயரும் உண்டு. “அருணம்” என்றால் சூரியன் என்று பொருள் நெருப்பின் நிறமான சிவப்பைக்குறிக்கும் ‘அசலம்’ என்றால் கிரி என்றும் மலை என்று பொருள். எனவே ‘அருணாசலம்’ என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள்.

இறைவன் ஜோதி வடிவாக காட்சியளித்த இந்த மலை உச்சியில் வருடந்தோறும் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடந்த 29ந் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேம்
பாதத்திற்கு அபிஷேம்

தோஷம் ¸ தீட்டு

திருக்கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது அனைத்து வகையான பக்தர்கள் அண்ணாமலையார் ஆலயத்திற்கு உள்ளேயும்¸ 2¸668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீதும் ஏறுவார்கள். பக்தர்களுக்கு தெரியாமல் ஏதாவது தோஷம் ¸ தீட்டு இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் கழித்து வரும் உத்திராடம் நட்சத்திரத்தில் திருதியை திதியில் பிராயச்சித்த அபிஷேகம் செய்வது வழக்கம்.

உத்திராடம் நட்சத்திரமான இன்று அந்த அபிஷேம் நடத்தப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

யாகங்களை வளர்த்து

அதனை தொடர்ந்து தீபத் திருவிழாவின் போது காட்சியளித்த உற்சவ மூர்த்திகள் மற்றும் 2¸668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலைமீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேம் செய்யக் கூடிய புனித நீரை வைத்து கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகங்களை வளர்த்தனர்.

மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேம்
புனித நீர் கலசம் 

பிறகு புனித நீர் அடங்கிய கலசம் அண்ணாமலையார் ஆலய பிச்சகர்கள் இடம் வழங்கப்பட்டது . அந்தப் புனித கலசத்தை மிராசு விஜயகுமார் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட குழுவினர் மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு  இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நல்லெண்ணெய் ¸பச்சரிசி மாவு ¸அபிஷேகப் பொடி¸ பால்,தயிர்  மற்றும் இளநீர், விபூதி¸ சந்தனம் ¸வாசனை திரவியங்கள் இவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரங்கள்

பின்பு அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரை அண்ணாமலையார் பாதத்தில் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

மலையே சிவனாக காட்சியளிப்பதால் அண்ணாமலையார் பாதத்திற்கு நடத்தப்படும் அபிஷேகம் 2¸668 அடி உயரமுள்ள மலைக்கே அபிஷேகம் செய்வதாக ஐதீகமாகும்.

- Advertisement -
email
contact@agnimurasu.com -ல் செய்தி, கட்டுரைகளை அனுப்பலாம்.

Must Read

error: Content is protected !!