Homeஅரசியல்ரஜினி அண்ணன் நடத்திய சிறப்பு யாகம்

ரஜினி அண்ணன் நடத்திய சிறப்பு யாகம்

ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சி வெற்றியடைய யாகம் நடத்திய அவரது அண்ணன் திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்து விட்டது என கூறினார். 

70வது பிறந்த நாள்

திருவண்ணாமலைக்கு திடீரென வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அய்யங்குளம் எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் இன்று காலை சிறப்பு யாகத்தை நடத்தினார். 

வருகிற 12ந் தேதி 70வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் ரஜனிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழவும்¸ அவர் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி வெற்றி பெறவும் அவர் இந்த யாகத்தை நடத்தினார். 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ 

தம்பி (ரஜினிகாந்த்) பிறந்த நாளுக்காக யாகம் நடத்தினேன். இந்த யாகம் கட்சி தொடங்குவற்காகவும் நடத்தப்பட்டது என வைத்துக் கொள்ளலாம். இந்த வருடத்தில் தொல்லையால்(கொரோனா) மக்கள் நிம்மதி இழந்தனர். எனவே எல்லா மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். 

பிறந்த நாளில் ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்பில்லை. 31ந் தேதி அறிவித்து விடுவார். 

See also  திருவண்ணாமலை:பா.ஜ.க-விடுதலை சிறுத்தையினர் கைது

சாமிகளை திட்டுகின்றனர் 

ரஜனிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அதிமுக அமைச்சர்களின் விமர்சனத்திற்கு ஜனவரி மாதம் அவர் பதிலடி கொடுப்பார். பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. யார் இணைய உள்ளார்கள் என்பதை ரஜினிகாந்த் சொல்வார். கட்சி பதிவு செய்ய தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. 

திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்து விட்டது. அவர்கள் கடவுள் இல்லை என்கின்றனர். சாமிகளை திட்டுகின்றனர். இந்நாடே சக்தி பீடம். இங்கு சாதி¸ மதம்¸ பேதமில்லை. நல்லது செய்தால் நல்லது நடக்கும். எந்த மதமாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும்¸ அவமதிக்க கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆயுஷ் யாகத்தின் பலன்கள்

ஆயுஷ் யாகம் நடத்துவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். உயிருக்கு  ஏற்படவிருக்கின்ற கண்டங்கள்¸ ஆபத்துகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். இனி வரும் காலங்களில் அனைத்து முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும் இதுதான் ஆயுஷ் யாகத்தின் பலன்கள். 

இந்த யாகத்தைத் தான் நடிகர் ரஜினிகாந்திற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அக்னி தலமான திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் 10 பேரை கொண்டு நடத்தியுள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!