Homeஅரசு அறிவிப்புகள்உளவியல் படித்திருந்தால் தினம் ரூ.1000 - கலெக்டர்

உளவியல் படித்திருந்தால் தினம் ரூ.1000 – கலெக்டர்

உளவியல் படித்திருந்தால் தினம் ரூ.1000 - கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு உளவியல்¸ ஆற்றுபடுத்துதல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது¸ 

குழந்தைகள் இல்லம் 

தமிழ்நாடு அரசு¸ சமூகபாதுகாப்புத்துறையின் கீழ்  இயங்கும் 36 அரசு குழந்தைகள் இல்லங்களில் (வால்டாக்ஸ்¸ தர்மபுரி¸ சேலம்¸ பெத்தநாயக்கன்பாளையம்¸ தூத்துக்குடி¸ தென்காசி தவிர்த்து)  தங்கி பயிலும் குழந்தைகளுக்கு ஆற்றுநர்கள் மூலம் ஆற்றுபடுத்துதல்(Counselling) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுளள்து.

அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  சமூக பாதுகாப்பு துறையின் கீழ்  செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 (ஒருவர் பெண் பணியாளர்) மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பபட உள்ளது.   இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற நபர்களில் விண்ணப்பங்கள் உரிய  சான்றின் ஒளி நகலுடன் 10-02-2021 ஆம் தேதிக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு தொவிக்கப்படுகிறது.

உளவியல் படித்திருந்தால் தினம் ரூ.1000 - கலெக்டர்

நேர்முக தேர்வு

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணங்கள் உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் வல்லூநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நடைபெறும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட  ரூ. 1000.(ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்கப்படும்.  

மேலும் விவரம் வேண்டுவோர் சமப்ந்தப்பட்ட அரசு குழந்தைகள் காப்பகம் திருவண்ணாமலை¸ கண்காணிப்பாளர்¸ போன் நம்பர் 9080018048 அவர்களை தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி¸

கண்காணிப்பாளர்

அரசு குழந்தைகள் காப்பகம்

சிங்கதிர்த்தம் எதிரில்¸ செங்கம் ரோடு¸

அரசு கலைக்கல்லூரி அருகில்¸

திருவண்ணாமலை மாவட்டம்.

இவ்வாறு கலெக்டர்  கூறியுள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!