Homeசெய்திகள்கோலப்போட்டியில் வெற்றி பெற்றால் வாஷிங்மிஷின்

கோலப்போட்டியில் வெற்றி பெற்றால் வாஷிங்மிஷின்

கோலப்போட்டியில் வெற்றி பெற்றால் வாஷிங்மிஷின்

திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளிலும்¸ அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும்  கோலப்போட்டிகளில் வெற்றி பெறும் பெண்களுக்கு வாஷிங்மிஷின்¸ மிக்ஸி¸குக்கர் போன்றவைகள் வழங்கப்படுகிறது. 

அருணை தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறது. விழாவில் கலை நிகழ்ச்சிகள்¸ வழக்காடு மன்றம்¸ பட்டிமன்றம்¸ மாணவ¸ மாணவியர்களின் உரைவீச்சு¸ தெருகூத்து¸ கிராமிய கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும்¸ திருவண்ணாமலை நகரில் மகளிர்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தியும் பரிசுகளை வழங்கி வருகிறது. 
மேலும் தமிழ்த்தொண்டு¸ பொதுத்தொண்டு¸ கலைச்சேவை¸ ஆன்மீகச் சேவை செய்து வருபவர்களுக்கு விருதுகளும்¸ பொற்கிழிகளும் வழங்கப்படுகின்றன. 
இந்த வருடத்திற்கான தமிழ் தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான மறைமலை அடிகளார் விருது திருவண்ணாமலை ஆசிரியர் மு.கண்ணன்¸ பொதுத் தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி விருது திருவண்ணாமலையை சேர்ந்த இரா.கண்ணகி¸ கலை தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான கலைவாணர் என்.எஸ்.கே விருது சேத்துப்பட்டு வட்டம்¸ புதுஅப்பேடு கிராமத்தை சேர்ந்த அ.பாலகிருஷ்ணன்¸ ஆன்மீக தொண்டாற்றி வருபவர்களுக்கான கிருபானந்த வாரியார் விருது செங்கம் வட்டம்¸ மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெ.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்படும் என அருணை தமிழ் சங்கத்தின் தலைவர் எ.வ.வேலு எம்.எல்.ஏ அறிவித்துள்ளார். 
கோலப்போட்டியில் வெற்றி பெற்றால் வாஷிங்மிஷின்
மேலும் கோலப் போட்டி குறித்து அவர் இன்று 11-1-2021 வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸
அருணை தமிழ் சங்கம் ¸ தமிழர் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்தில்  39 வார்டுகளிலும் கோலப்போட்டிகளை நடத்துகிறது. 13-1-2021 (புதன்கிழமை) இரவு 10 மணிக்குமேல் அதாவது போகிப் பொங்கல் இரவில் போடப்படும் கோலங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதற்காக ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியே நடுவர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
திருவண்ணாமலை நகரின் 39 வார்டுகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும் முதல் பரிசு¸ இரண்டாம் பரிசு¸ மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுள் ஐந்து ஆகிய எட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிங்கர் வாஷிங் மிஷின்¸ இரண்டாம் பரிசு ரூ.3500 மதிப்புள்ள கேஸ் அடுப்பு¸ நான்ஸ்டிக் தவா¸ மூன்றாம் பரிசு 2500 மதிப்புள்ள மிக்ஸி குக்கர் மற்றும் ஆறுதல் பரிசு ஒவ்வொரு வார்டிற்கும் 5 நபர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள ரைஸ் குக்கர் வழங்கப்படும்.
பரிசுகள் வரும் 20ந்தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ள அருணை தமிழ்ச் சங்க தமிழர் திருநாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி  வழங்க உள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!