Homeஅரசு அறிவிப்புகள்கொரோனா தடுப்பூசி-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17ஆயிரத்து 206 பேரில் இதுவரை 276 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைவரும் தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம்¸ போளுர் அரசு மருத்துவமனை மற்றும் கொம்மநந்தல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக இன்று 19.01.2021 கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது¸ நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி¸ திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் அஜிதா¸ அரசு அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள்¸ சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தடுப்பூசி போடும் நபர்களுக்கு உடல் வெப்பம்¸ இரத்த அழுத்தம்¸  பல்சோமீட்டர் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும்¸ கணினியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது¸ கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவது¸ தனி அறையில் வைத்து கண்காணிக்கப்படுவது குறித்தும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். 

See also  குரூப் 2¸-2A¸குரூப் 4க்கு அரசு சார்பில் இலவச பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் 99 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 322 தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய¸ மாநில அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என 17ஆயிரத்து 206 பேர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந் தேதி தொடங்கியது. சுகாதார பணியாளர்கள் மட்டுமன்றி அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 14¸400 டோஸ்  எண்ணிக்கையிலான கோவிஷீல்ட் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வரப்பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை¸ போளுர் அரசு மருத்துவமனை¸ ஆரணி அரசு மருத்துவமனை¸ வந்தவாசி அரசு மருத்துவமனை மற்றும் கொம்மநந்தல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்¸ என மொத்தம்  6 இடங்களில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து போடப்பட்டு  வருகிறது. 

See also  2295 கருக்கலைப்புகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து 16.01.2021 முதல் 18.01.2021 வரை கடந்த மூன்று நாட்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள் உட்பட¸ சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 276 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும்¸ பொங்கல் பண்டிகை காரணமாக தடுப்பூசி போட குறைவான நபர்களே முன்வந்ததாகவும்¸ இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய ஆய்வின் போது மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள்¸ சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியார்களிடம்¸ கோவிட்-19 தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த கலெக்டர் சந்தீப் நந்தூரி அனைவரும் தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!