Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை: 843பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை: 843பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை: 843பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 843 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். 

தனியார் வேலை

திருவண்ணாமலை மாவட்டம்¸ செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் செய்யாறு¸ அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து நேற்று நடத்திய மாபொரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து¸ 843 நபர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிவுரிவதற்கான நியமன உத்தரவு ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில்¸ செய்யாறு எம்.எல்.ஏ  தூசி மோகன்¸ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ. யோகலட்சுமி¸ அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் ந. கலைவாணி¸ அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ தனியார் நிறுவனங்கள்¸ வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது 

இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வேலை கிடைக்க வாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு ஆன்லைன் மூலம் வேலைநாடுநர்கள் 3026 நபர்களும்¸ வேலை அளிக்க 92 தனியார் நிறுவனங்களும் பதிவு செய்துள்ளனர்.

மிகவும் கடினமானது

இளைஞர்களுக்கு வேலை வாங்குவது எவ்வளவு முக்கியம் என தெரிய வேண்டும். கல்லூரி முடித்தவுடன் நிறுவனங்களில் வேலை தேடுகிறீர்கள். அப்போது வேலை¸ சம்பளம்¸ இடம் ஆகியவற்றை பார்த்து வேலை தேடினால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்காது. இந்த உலகத்தில் வேலை கிடைப்பதில் போட்டி கடுமையானது¸ மிகவும் கடினமானது. வாய்ப்புகள் வரும் போது அதை பற்றிக் கொள்ளுங்கள். 

இன்றைய காலத்தில் நிறுவனங்கள் வேலை அனுபவம் இருப்பவர்களுக்கு முதல் முன்னரிமை அளிக்கிறது.  புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுபவம் தேவை. இந்த வேலை தான் வேண்டும் என இல்லாமல்¸ கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதால் பவ்வேறு நன்மைகள் உள்ளது¸ வேலை கலாச்சாரம்¸ நேரம்¸ எப்படி வேலை பார்க்க வேண்டும் மற்றும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் முக்கியமானது

தற்போது நீங்கள் பெற்றோரை சார்ந்து உள்ளீர்கள்¸ இனி மேல் உங்கள் வருமானம் மூலம் உங்களை சார்ந்து இருக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். முதல் வேலை அனுபவம் முக்கியமானது¸ அப்போது அடுத்த வேலைக்கு உங்களை கருத்தில் கொள்வார்கள். இன்று போதுமான அளவு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது¸ எந்த வேலை கிடைத்தாலும் அதை நீங்கள் செய்ய வேண்டும். 

திறன் பயிற்சி மிகவும் முக்கியமானது. வேலை வாய்ப்பு வரும் போது உங்கள் நண்பர்கள் உட்பட அனைவரும் உங்களுக்கு போட்டியாளர்கள். அரசுத் துறைகளில் TNPSC,UPSC,Banking,Railways, RRB என லட்சக்கணக்கில் வாய்ப்புகள் உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நீங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேலை கேட்டு அதிக மனு

இன்றைய வேலைதேடுபவர்களிடம் உள்ள இடைவெளி திறன் மட்டும் தான். நிறுவனங்கள் எதிர்பார்ப்பது¸ ஆளுமை வளர்ச்சி¸ அறிவை மேம்படுத்துதல்¸ தொடர்பு¸ தோற்றம்¸ தொழில்முறை அணுகுமுறை ஆகியவை ஆகும். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும நாள் கூட்டத்தில் வேலை கேட்டு அதிக மனுக்கள் வருகிறது. எல்லோருக்கும் அரசு வேலை கிடைக்காது. எந்த வேலையாக இருந்தாதும் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய வேண்டும்¸ கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை எளிதானது அல்ல¸ உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

இவ்வாறு கலெக்டர் பேசினார். 

முகாமில் 2652 ஆண்கள்¸ 1469 பெண்கள் என மொத்தம் 4121 நபர்கள் கலந்து கொண்டனர். இதில்¸ 611 ஆண்கள்¸ 232 பெண்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர்.  முகாமில் Galaxy Cargo & Logistics Service Ltd. Sriperumbudur, Ashok Leyland Hosur, TVS Training & Service Chennai, HDFC Bank Vellore, Rodamine Apparel Industries Tirupur, Lloyds Insulations India Ltd. Vembakkam, Cheyyar Sez Developers Pvt. Ltd உள்பட 72-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!