Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று வழிபாடு செய்தார். கணவர் நீடுழி வாழவும்¸ திமுக ஆட்சி மலரவும் அவர் வேண்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. 

கடவுள் நம்பிக்கை

இந்து கடவுள்களையும்¸ இந்துக்களையும் திமுக இழிவு படுத்தி வருவதாகவும்¸ இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர் ஸ்டாலின் என்றும் எதிர்கட்சிகளும்¸ இந்து அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.  ஆனால் ஸ்டாலின் மனைவி துர்கா அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர். இதே போல் குலதெய்வ வழிபாட்டையும் தவறாமல் மேற்கொள்பவர். திருப்பதி¸ பழனி¸ 11 திவ்யதேச கோயில்கள் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு ஒரு ரவுண்டு சென்று வந்து விட்டார். நாகை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் குலதெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டியுள்ளார். 

முதல்வர் வேட்பாளராக 

அதே போல் முக்கியமான நேரங்களில் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அவரது தெய்வ நம்பிக்கையை பார்த்து பா.ஜ.க எம்.பி¸ சுப்பிரமணியசாமி¸ கடவுள் நம்பிக்கை கொண்டவரான துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் தனது கணவருக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என சமீபத்தில் துர்கா ஒரு மூதாட்டியிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு ஸ்டாலின் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. 

நன்மைகள் அதீகம் 

மாசி மாத பவுர்ணமி இன்று மாலை 3.49 மணிக்கு தொடங்கியது. இது நாளை பகல் 2.42 வரை நீடிக்கிறது. இந்நாளில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு கிரிவலம் வந்தால் நன்மைகள் அதீகம் என்றும்¸ கர்மவினைகள் தொலையும் என்பது ஐதீகம் ஆகும். மேலும் மாசி மகமான இன்றைய தினம் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் கவுதமநதியில் தன்னை மகனான பாவித்த வல்லாள மகராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

கூட்டம் அதிகரிப்பு 

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் கிரிவலம் செல்ல கொரோனாவை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம்  தடை விதித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் வாடகை பஸ்களிலும்¸ வேன்களிலும்¸ கார்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் சென்றனர். இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும்¸ மாடவீதிகளிலும்  கூட்டம் மிகுந்து காணப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பஸ்கள் சென்று வரவில்லை. பஸ்கள் ஓடியிருந்தால் இன்னும் கூட்டம் அதிகரித்திருக்கும். 

திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

காலபைரவர் சன்னதி

விசேஷமான நாளான இன்றைய தினம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் மாலையில் விஜயம் செய்தார். அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். நவகிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றினார். பிறகு காலபைரவர் சன்னதியிலும் தீபம் ஏற்றி வழிபட்டார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் சென்றிருந்தார். 

முதல்வராக வேண்டி

ஆங்கில தேதியின்படி ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் மாதம் 1ந் தேதி என்றாலும் நட்சத்திரப்பிரகாரம் நாளை பூரம் நட்சத்திரத்தில் அவரது பிறந்த நாளாகும். ஸ்டாலின் சிம்ம ராசிக்காரர் ஆவார். சிம்ம ராசிக்கு அதிபதி சிவபெருமான். எனவே கணவர் நீடுழி வாழவும்¸ நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வரவும் அவர் அண்ணாமலையார் கோயிலில் வேண்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!