Homeஆன்மீகம்ஜீவன் முக்தியடைந்த பொன்னம்பல சுவாமியின் மகிமைகள்

ஜீவன் முக்தியடைந்த பொன்னம்பல சுவாமியின் மகிமைகள்

ஜீவன் முக்தியடைந்த பொன்னம்பல சுவாமியின் மகிமைகள்

ஜீவன் முக்தியடைந்த ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் 187ம் ஆண்டு மகாகுருபூஜை பெருவிழா வருகிற 9ந் தேதி நடக்கிறது.

சிவனை நினைந்து

அகில உலகத்தையும் காத்தருளும் சிவபெருமானின் அருளால் இந்த கிடைத்தற்கரிய மானுட பிறவியில் அவனருளால் சிவனை நினைந்து நினைந்து தியானம் செய்து மக்களுக்காக தொண்டாற்றியவர்களை அவ்விறைவனுக்கு சமமானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. அவ்வழியில் பல சித்தர்கள் இறை தொண்டாற்றி ஜீவமுக்தி அடைந்துள்ளனர்.

அவ்வகையில் 187 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்து இறைதொண்டாற்றி ஜீவன் முக்தியடைந்தவர் சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள்.(ஆன்மாவை தரிசனம் செய்து அதனுடன் கலப்பது ஜீவன் முக்தி எனப்படுகிறது)

மகாஅபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம்¸ திருப்போரூர்-செங்கற்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் அவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. இங்கு மடாலயம் கட்டப்பட்டு ஆன்மீக சேவையாற்றப்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீமத் மகான் பொன்னம்பல சுவாமிகளின் 187ம் ஆண்டு மகாகுருபூஜை வருகிற 9-3-2021 ந் தேதி செவ்வாய்கிழமை அன்று விமர்சையாக நடக்கிறது. 

அன்றைய தினம் காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கலசபூஜை வேள்வியும் 8.30 மணிக்கு தேவாரம் திருவாசகம் பாராயணமும் 10 மணிக்கு மகாஅபிஷேகமும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெறும். 

See also  2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

முன்னதாக 8ந் தேதி திங்கட்கிழமை மாலை சிறப்பு அபிஷேகமும்¸ சுவாமிக்கும் நந்தியம் பெருமானுக்கும் காய்கனி அலங்காரமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிவனும் சித்தர்களும் எனும் தலைப்பில் சிவத்திரு ஞான.அருண்குமார் சொற்பொழிவாற்றுகிறார். 

சுவாமியின் மகிமைகள் 

காஞ்சிபுரம் மாவட்டம்¸ தற்போதைய திருப்போரூர் வட்டம்¸ செம்பாக்கம் எனும் கிராமத்தில் திருச்சீற்றம்பல முதலியார் – சொக்கம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் பொன்னம்பல சுவாமிகள். திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு வந்தார். நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு சென்று ஈஸ்வரனை மனமுருகி வேண்டினார். அப்போது அங்கிருந்த சன்னியாசி¸ தான் சமைத்த சாதத்தை ஒரு பிடி சொக்கம்மாளிடம் தந்தார். என்ன ஆச்சரியம். 10வது மாதத்தில் ஆண் குழந்தையை சொக்கம்மாள் பெற்றெடுத்தார். ஜம்புகேஸ்வரர் கருணை காட்டியதை உணர்ந்து குழந்தைக்கு சன்னியாசி சொன்னது போல் பொன்னம்பலம் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 

விபூதியால் தீரும் நோய் 

வேத பாடங்களும்¸ வேதாந்த பாடங்களும் பல கற்று எந்நேரமும் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தி வந்த பொன்னம்பலத்திற்கு இயல்பாகவே பல்வேறு சக்திகள் தோன்றின. தன்னிடம் வரும் நோய்வாய்பபட்டவர்களின் உடலில் விபூதியை பூசி விடுவார் பொன்னம்பல சுவாமிகள். மேலும் விபூதியை உள்ளுக்குள் சாப்பிட்டவும் கொடுப்பார். சில தினங்களிலே நோய் மாயமாய் மறைந்து விடும். இதையடுத்து இவரது புகழ் பரவியது. மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்¸ இவர் தரும் விபூதியால் தீருவதால் விபூதி வள்ளல் என பெயரெடுத்தார். 

See also  திருவண்ணாமலைக்கு 2 யானை கேட்டு அதிகாரி கடிதம்

ஒரு சமயம் தன்னை சோதிக்க வந்தவர்களுக்கு தக்க பாடமும் புகட்டியிருக்கிறார். இறந்தவன் போல் நடித்தவன் மீது விபூதியை தூவி உண்மையாகவே அவனது உடம்பில் இருந்து உயிரை எடுத்து விட்டார். பொறாமை கொண்டவர்கள் தவறை உணர்ந்து காப்பாற்றும்படி பொன்னம்பல சுவாமியின் காலில் விழந்து கதறினர். இதையடுத்து மனம் இறங்கிய பொன்னம்பல சுவாமிகள் திருநீற்றை இறந்தவன் உடலில் பூசி உயிரை வரவழைத்தாக இப்போதும் அந்த ஊரில் பிரம்மிப்பாக பேசப்படுகிறது. 

ஜீவன் முக்தியடைந்த பொன்னம்பல சுவாமியின் மகிமைகள்

இப்படி பல்வேறு மகிமைகள் நிறைந்த பொன்னம்பல சுவாமியின் குருபூஜை குறித்து மடாலயத்தின் நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது¸ 

திருமுதுகுன்றத்து ஆதீனம்

இந்த ஆண்டு 187ம் ஆண்டு குருபூஜையை சிறப்பாக நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.  குருபூஜையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தான மரபு திருவண்ணாமலை துறையூர்¸ திருமுதுகுன்றத்து வீர சைவ ஆதீனம் 24ம் பட்டத்து சீர்வளர்சீர் இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகளின் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார். 

சென்ற ஆண்டு குருபூஜை விழாவிற்கு நிதியுதவியும்,பொருளுதவி மற்றும் குருசேவை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களின் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 9ந் தேதி நடைபெறும் குருபூஜையில் பங்கேற்று நலம் பல பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  

See also  சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

மேலும் நித்ய பூஜை அறக்கட்டளை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நித்ய பூஜையில் கலந்து கொள்பவர்கள் ஆயுள் சந்தாவாக ரூ.1000 மட்டும் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு எல்லாம் வல்ல மகான் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் பேரருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

தொடர்புக்கு  :

திரு. சி.பொன்னம்பலம் – 9840224400

திரு. சி. விவேகானந்தன்¸ 9094498845

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருமடாலயம் நிர்வாகிகள் மற்றும் பரம்பரையினர்.

கோயில் அர்ச்சகர் அலங்கார செம்மல் நி.குழந்தைவேல் அய்யர் 9710124577

திருப்போரூர் – செங்கல்பட்டு நெடுஞ்சாலை

செம்பாக்கம் கிராமம்¸ காஞ்சிபுரம் மாவட்டம் – 603 108.

அமைவிடம் : சென்னையிலிருந்து செம்பாக்கம் 55 கி.மீ. தூரத்திலும் மாமல்லபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் பொன்னம்பல சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

ப. பரசுராமன் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!