Homeசெய்திகள்திருவண்ணாமலை:ஊழல் அதிகாரி அதிரடி மாற்றம்

திருவண்ணாமலை:ஊழல் அதிகாரி அதிரடி மாற்றம்

திருவண்ணாமலை:ஊழல் அதிகாரி அதிரடி மாற்றம்

சமையலர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் மீது உயரதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டதையடுத்து தருமபுரிக்கு அவரை மாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கதிர்சங்கரை பணிநீக்கம் செய்திட கோரி பாதிக்கப்பட்டோர் தரப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்பு 

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 42 சமையலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் மீது சமீபத்தில் வந்தவாசியைச் சேர்ந்த ராஜமான்சிங் என்பவர் மாவட்ட ஆட்சியர்¸ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்¸ லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார். 

ரூ.1கோடி முறைகேடு 

ஒரு பணியிடத்திற்கு ரூ.10 லட்சம் வரை அவர் வசூல் செய்திருப்பது¸ இரவு காவலர் பணியிடங்களை சமையலர் காலி பணியிடங்களாக மாற்றி முறைகேடு செய்திருப்பது¸ கொரோனா காலத்தில் மூடப்பட்ட விடுதிகளின் பெயரில் உணவு கட்டணமாக ரூ.1கோடி மேல் முறைகேடு  செய்திருப்பதாகவும் அவர் மீது அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த முறைகேட்டில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் ரவிக்குமார்¸ செங்கம் மாணவர் விடுதி காப்பாளர் ஆறுமுகம் மற்றும் ஆதிதிராவிட ஆசிரியர் காப்பாளர் சங்கத்தினர் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

See also  கலெக்டர் கேட்டதால் கடையடைப்பு- வியாபாரிகள் சங்கம்

இதையடுத்து கடந்த 1 மற்றும் 2ந் தேதி நடைபெற்ற சமையலர் பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்திட ஆதிதிராவிடர் நல ஆணையரின் நேர்முக உதவியாளர் ஹேமலதா¸ பழங்குடியினர் நல இயக்ககம் கண்காணிப்பாளர் லீலாலட்சுமி ஆகியோரை மேற்பார்வையாளராக அரசு நியமித்தது. அவர்கள் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து நேர்காணலை நடத்தி முடித்தனர். 

திருவண்ணாமலை:ஊழல் அதிகாரி அதிரடி மாற்றம்
கதிர்சங்கர் 

தருமபுரிக்கு 

இந்நிலையில் ஊழல் புகாருக்கு ஆளான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை தருமபுரி மாவட்ட திட்ட அலுவலராக மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். திண்டுகல்லில் தாட்கோ மேலாளராக இருந்த பார்த்திபன்¸ திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பணி மாற்றம் செய்யதால் மட்டும் போதாது கதிர்சங்கரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டோர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமாரசாமியை சந்தித்து மனு அளித்தனர். 

மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வி.கண்ணன்¸ என்.சேதுராமன்¸ எ.சரவணன்¸  எம்.ராஜராஜேஸ்வரி¸ பெ.சிவமணி¸ இ.கலையரசன்¸ ந.தீபக் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது¸

See also  திருவண்ணாமலை பஜாரில் அடுக்குமாடி கார் பார்க்கிங்

நேர்காணல் 

சென்னையில் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 1 2 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் சமையலர் பணிக்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடந்து முடிந்தது.

இடஒதுக்கீடு பின்பற்றாமலும் சமையலர் பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பிருந்த நிலையில் திடீரென திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கதிர்சங்கரை 3ந் தேதி தருமபுரிக்கு மாற்றம் செய்து சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கூடுதல் கல்வி தகுதி உடையவர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கும் அரசு ஆணை மற்றும் விதிகளை மூடிமறைத்து முறைகேடு செய்து லஞ்சம் பெறுவதற்காகவே ஒப்புக்காக கடந்த 1.2.2021¸ 2.2.2021 ஆகிய தேதிகளில் ஊழல் அதிகாரியாக குற்றம் சுமத்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் தலைமையில் ஒப்புக்காக நடத்தப்பட்ட நேர்காணலை ரத்து செய்யவும் அவர் செய்த ஊழல்களை முறைப்படி லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை மூலம் விசாரணை செய்து அவர் பணிநியமனத்துக்காக பெறப்பட்ட லஞ்சபணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

See also  கயிறு இழுக்கும் போட்டி-கலெக்டர் மனைவி அணி வெற்றி

பணிநீக்கம் 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அவரை பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். 

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர்¸ இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!