Homeஆன்மீகம்அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன்

அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன்

அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன் 

திருவண்ணாமலை அடுத்த ராயங்குப்பம் அங்காளம்மன் கோயிலில் 5 அடி நீளமுள்ள வீச்சரிவாள் மீது நின்று சாமி ஆடிக் கொண்டே மாணவன் ஒருவன் அருள்வாக்கு கூறி வருவது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.  

குழந்தை வரம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்துள்ள திருமலை ஊராட்சிக்குட்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த வயல்களுக்கு மத்தியில் மூன்று நிலைகளுடன் கூடிய விமான கோபுரத்தின் கீழ் வடக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் தன்னை நாடிவருபவர்களுக்கு தாயாக இருந்து குழந்தை வரம் தரும் சுயம்பு அங்காளம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்பாள் பார்வதிதேவி சுயம்பு அங்காளம்மனாக தோன்றி அருள்பாலிக்கிறார். 

இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் அமாவாசையில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் தரப்படும் (கலச தேங்காய்) மடியில் கட்டிக்கொண்டு அம்மன் முன் மண்டியிட்டு மனதார வேண்டி 9 முறை கோவிலை சுற்றிவந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்த சுயம்பு அம்மன்மீது பெண்கள் வைத்துள்ள தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதிகள் மழலைச்செல்வத்துடன் வந்து அம்மன் முன் வைத்து பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டு குழந்தைக்கு பெயர் சூட்டுவது இத்தலத்தின் ஐதீகமாகவே உள்ளது.

மச்சஅவதாரம் 

இத்தல அம்மனை வணங்கினால் கல்வியில் மேம்படவும் கடன்பிரச்சனைகள் தீரவும் கோர்ட் வழக்குகளில் விடுபடவும் பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேரவும் பில்லி சூன்யம் ஏவல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மரணபயம் உள்ளவர்களும் அமாவாசையில் அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தமும்¸ அம்மன் நெற்றியில் வைக்கப்படும் பிரம்மகபால மையும் கோவில் நிர்வாகம் சார்பில் தரப்படுகிறது. தீர்த்தத்தை உட்கொண்டு மையை நெற்றியில் இட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்பது இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. 

See also  ரூ.2 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

மேலும் அம்மன் கோவில் எதிரே உள்ள தீர்த்த குளத்தில் தங்களின் பிரச்சனைகளை சொல்லி நெற்பொறி வெல்லத்தை தலையை சுற்றி குளத்தில் போட்டால் மச்சஅவதாரம் எடுத்துவந்து அம்மன் நெற்பொறி சாப்பிட்டு குறைகளை தீர்ப்பாள் என்பதும் வெல்லம் கரைவதுபோல் பிரச்சனைகளும் கரையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேறு எங்கும் அம்மன் சன்னதிகளில் இல்லாத வகையில் இங்கு தலவிருட்சமாக சூலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன்

கனவில் அம்மன்

ஏழு தலைமுறைகளாக ராயங்குப்பம் கிராமத்தில் வசித்துவரும் முருகன் சுவாமிகளின் சந்ததியினர் கடந்த 6 வருடங்களுக்குமுன் சுயம்பு அம்மன் அங்காளபரமேஸ்வரி கனவில் தோன்றி நான் உன் நிலத்தில் ஒரு புதரில் உள்ளேன். என்னை வெளியில் கொண்டுவந்து எனக்கு கோவில் கட்டு என்று கட்டளையிட்டு அம்மன் மறைந்தது. உடனே திடுக்கிட்டு எழுந்த முருகன் சுவாமிகள் நடந்தவற்றை ஊரில் உள்ளவர்களிடமும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி உடனே கோவில் கட்டும் பணியை தொடங்கினார். 104 நாட்களிலேயே கோயில் கட்டி முடிக்கப்பட்டு மாசி மகத்தன்று மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

See also  அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

அருள்வாக்கு 

4ம் வகுப்பு படித்து வரும் முருகனின் மகன் வேம்பரசன் தந்தைக்கு துணையாக ஆன்மீக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறான். இது மட்டுமன்றி மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று அம்மன் அருள் வந்து இவன் அருள்வாக்கும் கூறிவருகிறான். அப்போது ஊஞ்சலில் உள்ள அங்காளம்மனை 9 முறை வலம் வந்து 5 அடி நீளமுள்ள வீச்சரிவாள் மீது நின்று சாமி ஆடிக் கொண்டே ஆக்ரோஷத்துடன் அருள்வாக்கு சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். கால்களுக்கு அழுத்தம் கொடுத்து சாமி ஆடினாலும் அவன் கால்களுக்கு காயங்கள் ஏதும் நிகழாமல் அம்மன் காப்பாற்றி விடுகிறார் என பரவசத்துடன் பக்தர்கள் கூறுகின்றனர். சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து வேம்பரசனிடம் அருள்வாக்கு கேட்டு வருகின்றனர். 

செவ்வாய்¸ வெள்ளி¸ ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலும் சுயம்பு அம்மன் முன் அமர்ந்து அருள்வாக்கு சொல்லப்படுகிறது.

மாங்கல்ய தடை 

பிரமாண்ட உருவில் படுத்திருக்கும் பெரியாயி அம்மன் பாதத்தில் மஞ்சள் சரடு கட்டியும் கூரைபுடவை வளையல் சாற்றியும் வழிபட்டால் மாங்கல்ய தடை திருமணம் நடைபெறும் என்பது இங்கு ஐதீகமாகவே உள்ளது. மேலும் 27 நட்சத்திர தாரர்களுக்கு உரிய மரங்களும் இத்தலத்தில் உள்ளது.

பேச்சுதரும் அம்மன்

See also  இடைக்காடர் குரு பூஜை - கொரோனா ஒழிய சிறப்பு யாகம்

சரிவர பேச இயலாத குழந்தைகளை இத்தலத்துக்கு கொண்டுவந்து அம்மன் முன் வைத்து நாக்கில் பூ அலகு போடுகின்றனர். அப்படி போட்டால் குழந்தைக்கு வெகுசீக்கிரமே பேச்சுத்திறன் அதிகரிக்கும் என்பது இங்குள்ள கிராம மக்களின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் சுயம்பு அம்மனை நம்புகின்றனர்.

அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன்

கோவிலை சுற்றி

பிரம்மராகினி¸ மகேஸ்வரி¸ கௌமாரி¸ வாராகி¸ வைஷ்ணவி¸ இந்திராணி¸ சாமுண்டீஸ்வரியும் தனிச்சன்னதியில் தட்சிணாமூர்த்தியும் மகாதுர்க்கையும் உள்ளனர். மூலவருக்கு எதிரே காவல்தெய்வமாக மதுரை வீரன்¸ பாவாடை ராயன்¸ அகோர வீரபத்திர சுவாமி, சங்கிலி கருப்பன்¸ வனச்சேரி காளியம்மன் உள்ளனர். தீர்த்த குள கரையோரத்தில் புற்றில் அமர்ந்த படவேட்டம்மனும் ரேணுகா பரமேஸ்வரியும் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

மயான கொள்ளை

மாசி மாதம் அமாவாசையில் நடைபெறும் மயான கொள்ளையை காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்துக்கு வேலை தேடி சென்றவர்களும் அன்று ஒன்று கூடி அம்மனின் உற்சவத்தில் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

தொடர்புக்கு

சுயம்பு அங்காளம்மன் சித்தர் அருள்வாக்கு பீடம்

முருகன் சுவாமிகள் 9531914449

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து வடமாதிமங்கலம் வழியாக போளுர் செல்லும் அனைத்து பேருந்துகளும் ராயங்குப்பம் கூட்ரோட்டில் நின்று சொல்லும். கூட் ரோட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!