Homeசுகாதாரம்இருதய நோய்க்கு காரணமாகும் எண்ணெய்

இருதய நோய்க்கு காரணமாகும் எண்ணெய்

இருதய நோய்க்கு காரணமாகும் எண்ணெய்

ட்ரான்ஸ் கொழுப்பினை¸  2023 ஆண்டிற்குள்¸ உணவு சங்கிலியில் இருந்து நீக்க அல்லது இரண்டு சதவிகிதத்திற்குள் குறைக்க உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். 

துரித உணவுகள்

உடல் செல்களின் வளர்ச்சிக்கும்¸ நரம்புகளை பாதுகாக்ககவும் முக்கியமாக உடல் ஆற்றலுக்கும் நல்ல கொழுப்பு துணை நிற்கிறது. அதே சமயம் கெட்ட கொழுப்பு ஆளையே குளோஸ் செய்து விடுகிறது. ட்ரான்ஸ் என்பதும் கெட்ட கொழுப்பு வகையைச் சார்ந்தது ஆகும். இது வனஸ்பதி¸ வனஸ்பதி நெய்¸ மார்கரைன்ஸ்¸ பேக்கரி ஷார்ட்டெனிங்ஸ்¸ கொழுப்பு ஸ்பிரேட்ஸ் போன்ற பொருட்களின் அதிகளவில் காணப்படுகின்றது. அதாவது எண்ணெயில் பொறித்த உணவுகள்¸ துரித உணவுகள்¸ பதப்படுத்தப்பட்ட உணவுகள்¸ செயற்கையான உணவுகளை பயன்படுத்தினால் ட்ரான்ஸ் கொழுப்பு நம் உடலில் சேரும். 

வலைதள சந்திப்பு

இதனால் இருதய நாளங்களில் ரத்தம் முன்னேற முடியாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. 

திருவண்ணாமலையில் சிட்டிஸன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்  மற்றும் சினம் நுகர்வோர் குழு சார்பில் நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் நடத்திய வலைதள சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில் குமார் கலந்து கொண்டு பேசினார்.மேலும்  இந்த நிகழ்ச்சியில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி¸ இருதயநோய் மருத்துவர் டாக்டர் விஜயபிரகாஷ்¸ உணவியல் நிபுணர் டாக்டர் லூரா ஆகியோர் கலந்து கொண்டு ஆரோக்கியத்திற்கு டிரான்ஸ் கொழுப்பின் தீங்கு பற்றி  விளக்கி பேசினர்.

இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு¸

5லட்சம் இறப்பு

தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது வனஸ்பதி¸ வனஸ்பதி நெய்¸ மார்கரைன்ஸ்¸ பேக்கரி ஷார்ட்டெனிங்ஸ்¸ கொழுப்பு ஸ்பிரேட்ஸ் போன்ற பொருட்களின் அதிகளவில் காணப்படுகின்றது. அதேபோல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால்¸ அதன் தன்மை மாறி அதில் ட்ரான்ஸ் கொழுப்பின் அளவு அதிகமாகும். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் இருதயம் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. இதனால்¸ ஒரு வருடத்தில்¸ இந்தியாவில் 60ஆயிரம் இறப்புகளும்¸ உலக அளவில் 5லட்சம் இறப்புகளும் ஏற்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசு 

இதன் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம்¸ இந்த ட்ரான்ஸ் கொழுப்பினை¸  2023 ஆண்டிற்குள்¸ உணவு சங்கிலியில் இருந்து நீக்க அல்லது இரண்டு சதவிகிதத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் வழியில்¸ இந்தியாவின்  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்¸ ட்ரான்ஸ் கொழுப்பினை 2022ம் ஆண்டிற்குள் (உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு ஆண்டு முன்பாகவே)¸  தற்போது 2021ல் இருக்கும் 3 சதவிதம் வரையறையில் இருந்து¸ 2022ல் எண்ணெய்கள்¸ கொழுப்புகள் மற்றும் உணவில் 2 சதவிதத்துக்கும் குறைந்து  இருக்கும் என்று அறிவித்துள்ளது.   ட்ரான்ஸ் கொழுப்பில் உள்ள ஆபத்தினை கருத்தில் கொண்டு¸ அரசாங்கம் விரைவாக இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும்¸ அதே போல் மாநிலங்கள் தக்க முறையில் சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

பெரும் பொறுப்பு 

அரசாங்கம் மாத்திரம் அல்லாமல்¸ எண்ணெய் உற்பத்தியாளர்கள்¸ ஹோட்டல்¸ உணவகம்¸ பேக்கரி உரிமையாளர்கள்¸ மருத்துவர்கள்¸ நுகர்வோர் அமைப்புக்கள்¸ மாணவர்கள்¸ ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் ட்ரான்ஸ் கொழுப்பினை உணவில் இருந்து நீக்க செயல்பட வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கின்றது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

இளம் வயதினர்

ட்ரான்ஸ் கொழுப்பிலிருந்து இளம் வயதினரும் தப்ப முடியாமல் போகிறது. இந்த துரித உலகில் கடந்த 20 வருடங்களாக இளம் வயதினரை அதிகமாக மாரடைப்பு தாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே பரிந்துரைக்கப்பட்ட உணவை உண்டு அனைவரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என இருதய நோய் டாக்டர்கள் அறிவுருத்தியுள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!