Homeஅரசியல்எதிரொலி மணியன்¸ காளிதாசுக்கு தகுதியில்லையா?

எதிரொலி மணியன்¸ காளிதாசுக்கு தகுதியில்லையா?

எதிரொலி மணியன்¸ காளிதாசுக்கு தகுதியில்லையா?

கீழ்பென்னாத்தூரில் பா.ம.க சார்பில் போட்டியிட எதிரொலி மணியன்¸              காளிதாசுக்கு தகுதியில்லையா? என எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். 

கடலூர் மாவட்டம் 

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலி மணியன்¸ மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிதாஸ்¸ மாவட்ட செயலாளர் ஜானகிராமன்¸ ஒன்றிய கவுன்சிலர் பக்தவச்சலம் ஆகியோர் சீட் கேட்டிருந்தனர். ஆனால் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பெருமாள் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு இத்தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. 

மன்னிப்பு கேட்டார் 

இதனால் பா.ம.க நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். பா.ம.க வேட்பாளர் செல்வக்குமார் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் நிற்கக் கூடிய உரிமை இந்த மண்ணின் மக்களுக்குத் தான் உள்ளது. உங்கள் உழைப்பில் நான் வந்து நிற்பது மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது என பா.ம.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஒப்பனாக பேசி மன்னிப்பு கேட்டிருந்தார். தேர்தலில் நிற்க சீட் கேட்கவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட அன்று 10 நிமிடத்திற்கு முன்புதான் சீட் தனக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தெரியும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கீழ்பென்னாத்தூரில் போட்டியிட வெளியூர் வேட்பாளரை பா.ம.க இறக்குமதி செய்தது ஏன்? என எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். 

செயல்வீரர்கள் கூட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியை ஆதரித்து திருவண்ணாமலையில் திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட திமுக அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வி.பி.அண்ணாமலை¸ சி.மாரிமுத்து¸ ராஜேந்திரன்¸ பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்ணன்¸ வேட்டவலம் பேரூராட்சி செயலாளர் ப.முருகையன்¸ ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் அய்யாக்கண்ணு¸ கலைவாணி¸ துணைத் தலைவர்கள் வாசுகி¸ உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸

டயர் நக்கிகள்

இடஒதுக்கீடுக்காக போராடிய வன்னியர்கள் 23 பேரை சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர் ஆட்சி. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது திமுக ஆட்சி. காடு உள்ளளவும்¸ கடல் நிர் உள்ளளவும்¸ பைந்தமிழ் உள்ளளவும், வான் உள்ளளவும் திராவிட கட்சிகளுக்குடன் கூட்டணி இல்லை என ராமதாஸ் கூறினார். இப்போது கூட்டணி வைத்துள்ளது அஇஅதிமுக எனும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில்தான். இதில் திராவிடம் இல்லையா? எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என ராமதாஸ் கூறகிறார். எடப்பாடி தமிழகத்தின் தலையெழுத்து¸ எடப்பாடிக்கு சட்டம்-ஒழுங்கு என்றால் என்னவென்று தெரியாது¸ அவருக்கு தெரிந்தது எல்லாம் லஞ்சமும்¸ ஊழலும்தான், டயர் நக்கிகள் என அவரது மகன் அன்புமணி கூறுகிறார்.

இட ஒதுக்கீடு குறைப்பு 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வடமாவட்டங்களில் வன்னியர்கள்¸ தெற்கு மாவட்டங்களில் பிறமலை கள்ளர் என பல பிரிவுகள் உள்ளன. திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 20 சதவீத இடஒதுக்கீட்டின் பலனை வடமாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் முழுமையாக அனுபவித்து வந்தனர். ஆனால் இப்போது 10.5 சதவீதம்தான் கிடைக்கும். 20 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை மாறி இப்போது 10 பேருக்குத்தான் வேலை கிடைக்கும். இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டதனால் வன்னியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 

வேட்பாளர் இறக்குமதி 

கீழ்பென்னாத்தூரில் போட்டியிட பண்ருட்டியில் இருந்து வேட்பாளரை பாமகவில் இறக்குமதி செய்திருக்கிறார்கள். இந்த மண்ணைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன்¸ காளிதாஸ்¸ ஜானகிராமன் ஆகியோருக்கு தகுதியில்லையா? தொகுதி மக்கள் ஏதாவது சர்ட்டிபிகேட் வாங்க பண்ருட்டிதான் போகணுமா? 

தொகுதி மேம்பாடு

சென்ற முறை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் செல்போன் தரப்படும்¸ 60 வயதானவர்களுக்கு பஸ் பாஸ் தரப்படும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தரப்படவில்லை. அதே போல்தான் மாதம ரூ.1500 வழங்கப்படும்¸ 6 சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அவர்களால் நிறைவேற்ற முடியாது. 

எதிரொலி மணியன்¸ காளிதாசுக்கு தகுதியில்லையா?

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர் பிச்சாண்டி. அவர் வெற்றி பெற்றால் கீழ்பென்னாத்தூர் தொகுதி மேலும் மேம்பாடு அடைய பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார். எனவே அவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு குறைக்கப்பட்டதையும்¸ இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சீட் கிடைக்காததால் பா.ம.கவினர் மனவருத்தத்தில் இருப்பதையும் போகிற இடங்களில் எல்லாம் எ.வ.வேலு விளக்கி கூறி எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி வருகிறாரே என வேட்பாளர் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!