Homeஅரசு அறிவிப்புகள்இதுவரை வாக்காளிக்காத முதியவர்

இதுவரை வாக்காளிக்காத முதியவர்

இதுவரை வாக்காளிக்காத முதியவருடன் கலெக்டர் சந்திப்பு 

இதுவரை வாக்காளிக்காத 66 வயது முதியவரை கலெக்டர் சந்தீப் நந்தூரி சந்தித்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். 


தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து தரப்பு வாக்காளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது குறித்தும் அவர் ஆய்வு நடத்தி வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக இன்று வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீசநல்லூர் இருளர் குடியிருப்பில் இதுவரை வாக்காளிக்காத கண்ணியப்பன் (வயது 66) என்பவருக்கும்¸ 18 வயது பூர்த்தி அடைந்து முதல்முறையாக வாக்களிக்கும் 5 நபர்களுக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி¸ சட்டமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 6ந் தேதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கருவி மூலம் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்விளக்கம் அளித்து¸ இருளர் வீடுகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஒட்டினார். வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே  உரையாற்றினார். 
இதுவரை வாக்காளிக்காத முதியவருடன் கலெக்டர் சந்திப்பு
திருவண்ணாமலை தாமரை நகரில் சென்ற சட்டமன்ற தேர்தலில் 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இதனால் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். இதே போல் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் 100 சதவிதம் வாக்களிப்போம் என்ற அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற திருநங்கை¸ நரிக்குறவர் வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விவரம்¸தொலைபேசி எண் மற்றும் அலுவலக முகவரிகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 

பொது மக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை மேலே தெரிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளவும் திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 அல்லது 1800-425-5672 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!