அரண்மனை ரகசியங்கள் அறிந்தவன் நான். உண்மைகளை ஒரு நாள் சொல்வேன் என சாவல்பூண்டி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு¸ தன் மகன் எ.வ.வே.கம்பனை முன்னிலைப்படுத்தி வருவது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கணும்¸ புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கணும். தொண்டர்கள் உழைச்ச உழைப்பெல்லாம் வீண் என மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோ வைரல் ஆனது.
இதையடுத்து பிரஸ்சை அழைத்த எ.வ.வேலு தனக்கு நூற்பாலைகள் இல்லை. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இல்லை. ரூ.500 கோடி பைனான்ஸ்சில் இல்லை என சாவல்பூண்டி சுந்தரேசன் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் தன் மகன் கம்பனை முன்னிலைப்படுத்தி வருவது குறித்து ஏதும் கூறவில்லை.
இந்நிலையில் சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
அவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள பா.ஜ.க தூது அனுப்பியது. இதற்கு மறுத்து விட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் நான் மரித்துப் போகிற வரை நான் திமுக தான் என இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தினமும் தனது முகநூல் பக்கத்தில் பழைய நினைவுகள் குறித்தும்¸ திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கியஸ்தர்கள் குறித்தும் எழுதி வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் எழுதிய பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி அவர்களோடு 35 ஆண்டுகால பழக்கம் தொடர்பு நட்பு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் 30 வருடங்களுக்கு மேலாக அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் சென்னை கோபாலபுரத்தில் வேளச்சேரி வீட்டில் அண்ணா அறிவாலயத்தில் காலையிலிருந்து மாலை வரை அவரோடு இருந்து மதிய வேளை ஜெமினி அண்ணா மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் காப்பகத்தில் உணவு வழங்கி மகிழ்ந்த அந்த நாட்கள் ….
ஒரு தலைமுறைக் காலம் ஒருவரோடு பழகி வாழ்ந்து பின் பற்றி புகழ்பாடி வாழ்க்கையையே இழந்தகாலம் அது வசந்த காலம்
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே திமுக மாநாடுகளில் பேசிய ஒரே பேச்சாளன் நான் தான் இதை விட எனக்கு எது வேண்டும் வேறு எவருக்கு இது கிடைத்திருக்கிறது? முரசொலியில் முன்னூறுக்கும் மேற்பட்ட என் கவிதைகள் வெளியாகி இருக்கிறது மூன்று வார்த்தை கூட ஒழுங்காக எழுத தெரியாத ‘மனப்பிறழ்வளர்கள்” என்னைப் பற்றி பேசுவதால் எனக்கு ஏது கவலை
திமுகவில் திருவண்ணாமலையில் பணம் சாதி பரம்பரை அரசியல் பின்னணி அப்பன் மாமன் அண்ணன் தாத்தா என்ற சாய்வும் பின்னணியும் இல்லாமல் எவனும் சாதிக்காத சாதனைகளை சாதித்த ஒரே மனிதன் நான் தான்
என் வாழ்நாளில் பத்து லட்சம் பேருக்கு பரிந்துரை செய்து கடிதம் கொடுத்தவன் அவர்களுக்காக பேசியவன் பத்தாயிரம் பேருக்கு நேரடியாக உதவியவன் பல பேருக்கு ஏணியாக இருந்து ஏற்றி விடடவன் பல பேர் மிகப் பெரிய பதவியிலிருந்து மிகச் சாதாரண பதவி வரை பெறுவதற்கு வருவதற்கு காரணமாக இருந்தவன்
நான் தான் ஒருவனுக்கு உதவி இருப்பனே தவிர எவன் உதவியையும் நான் எதிர்பார்த்ததில்லை எவரிடத்தும் கேட்டு நின்றதில்லை இனி கேட்கவும் மாட்டேன்
லூசுப் பயல்களே நடக்காதாம் கிடைக்காதாம் முடியாதாம் இயலாதாம் ஆகாதாம் எனக்கு எதுவும் வேண்டாம் நான் நிறைவாக இருப்பவன் எனக்கு எந்த குறையும் இல்லை குறைவும் இல்லை குரைப்பவர்கள் குறை மனது படைத்தவர்கள் வயிற்றெரிச்சல் பேர்வழிகள் என்னை வைவதால் கிண்டல் கேலி செய்வதால் இன்னும் எழுவேன் உணமைகளை எழுதுவேன் உள்ளதை எழுதுவேன்
நல்லதை எழுதுவேன் அதையும் புத்தகமாக்குவேன் நடக்காது கிடைக்காது முடியாது இயலாது ஆகாது என்று என்னைச் சொல்ல கூடாது எனக்கு எதுவும் எவராலும் நடக்க வேண்டாம் எனக்கு எதுவும் எவராலும் கிடைக்க வேண்டாம் வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
நான் சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதென்றால் வேறு மாதிரி எழுதுவேன் இந்த உண்மைகளே ‘தம்பட்டம்” என்றால் உண்மையான உண்மைகளை எல்லா உண்மைகளையும் சொல்ல ஆரம்பித்தால் என்னவாகும் என்னை விட அரண்மனை ரகசியங்கள் அறிந்தவன் எவன் இருக்கிறான்!
பாவம் அந்த ‘சண்டைக்காரன்” எய்தவன் எவனோ இருக்க இவனை நோவதால் என்ன பலன்? எல்லா உண்மைகளையும் ஒரு நாள் சொல்வேன்.
இவ்வாறு அந்த பதிவில் உள்ளது.
சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு திமுகவினர் சிலர் அவரைப்பற்றி அவதூறாக எழுதி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்குதான் அவர் பதிலடி கொடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
எ.வ.வேலுவுடன் பெரும்பாலும் உடன் இருந்தவர் சாவல்பூண்டி சுந்தரேசன். அவரது ஒவ்வொரு அசைவும் தெரிந்தவர். இந்நிலையில் அவரது இந்த பதிவு திமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்டதும் யோவ்¸ அமைதியா இருங்கய்யா¸ ஏற்கனவே தலைவலியா இருக்கு. தேர்தல் நேரத்தில எதையாவது கொளுத்தி போட்டு அந்த ஆள தூண்டி விட்ராதீங்க என எ.வ.வேலு தனது விசுவாசிகளிடம் ஏகத்துக்கு எகிறி விட்டாராம்.
எ.வ.வேலுவுக்கு 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸பைனான்சில் ரூ.500 கோடி முதலீடு என சாவல்பூண்டி பேசியதை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள அதிமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன. இது பற்றிய மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருங்க¸ நெருங்க திருவண்ணாமலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.