ஜமுனா மரத்தூர் மலைப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தேர்தல் சம்மந்தமான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்¸ ஜமுனாமரத்தூர் வட்டம்¸ ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம்¸ குட்டக்கரை மற்றும் புளியாங்குப்பம் மலை கிராமங்களின் வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னே;றபாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இரு சக்கர வாகனத்தில் 3 கி.மீ. தூரம் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம்¸ ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம்¸ குட்டக்கரை மலை கிராம வாக்குச் சாவடி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலக வாகனத்தில் பட்டறைக்காடு கிராமத்திலிருந்து குட்டக்கரை கிராமம் வரை பயணம் மேற்கொண்டு அங்குள்ள வாக்குச் சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாய்வு தளம்¸ குடிநீர்¸ கழிவறை¸ மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நம்மியம்பட்டு ஊராட்சி¸ புளியாங்குப்பம் மலை கிராமத்திற்கு நான்கு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத காரணத்தால்¸ செங்குத்தான மலைப் பாதையில் இரு சக்கர வாகனத்தில் 3 கி.மீ. பயணம் மேற்கொண்டு புளியாங்குப்பம் மலை கிராம வாக்குச் சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாய்வு தளம்¸ குடிநீர்¸ கழிவறை¸ மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள்¸ தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஊருக்கு ஏற்கனவே கழுதைகளின் மீதுதான் வாக்குபெட்டிகள் சென்று வந்தன. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த ஊருக்கு செல்ல 100 நாள் வேலை திட்டத்தில் கரடு முரடான பாதையில் மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில்தான் ஆட்சியர் டூ வீலரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அத்திப்பட்டு கிராமத்தில்¸ உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உற்பத்தி அலகில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100மூ வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மகளிர் குழுவினர் இந்திய வரை படத்தில் பச்சை மிளகாய் மூலம் வரைந்திருந்த தேர்தல் விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரால் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த செயல் விளக்கம் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது. ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் மலைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகள் கொண்டு வரையப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்பு வண்ண கோலங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு¸ 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
ஜமுனாமரத்தூர் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் மலைப் பகுதியில் விளையும் சாமை அரிசியினால் 100மூ வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி காட்சிபடுத்தப்பட்டிருந்து ஒவியத்தை நேரில் பார்வையிட்டு¸ ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற 100சதவீத தேர்தல் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில்¸ மகளிர் திட்ட இயக்குநர் பா. சந்திரா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம்¸ தேர்தல் அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.