Homeஆன்மீகம்ஆதிகான் புரவடை அங்காளம்மன் கோயில் சிறப்புகள்

ஆதிகான் புரவடை அங்காளம்மன் கோயில் சிறப்புகள்

ஆதிகான் புரவடை அங்காளம்மன் கோயில் சிறப்புகள்

ஆதிகான் புரவடை அங்காளம்மன் கோயிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் இரவு தங்கி 1008 பால்குட அபிஷேகம் நடத்தி வருகின்றனர். 

தோஷங்கள் தீரும் 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ள ஆதிகான் புரவடை கிராமத்தில் ஏரிக்கரையின்கீழ் குடையாக உள்ள வேப்பமர நிழலில் பழமையும் பெருமையும் வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்பாள் பார்வதி தேவியே வடக்கு பார்த்தவாறு அமர்ந்த கோலத்தில் ரத்தினக்கல் மூக்குத்தியின் ஒளியில் சிரித்த முகத்துடன் சுயம்பு அங்காளம்மனாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை வணங்கினால் சகல தோஷங்களையும் தீர்ப்பாள் அம்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. 

நேர்த்திக் கடன்

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுயம்பு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி எலுமிச்சை பழம் மாலை அணிவித்தும் சிலர் கோவிலுக்கு மணி கட்டுவதும் ஒருசிலர் அமாவாசை யாகத்திற்கு மிளகாய் கொடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும் திருமண தடை கடன்பிரச்சனை சத்துருக்கள் பிரச்சனை செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாக தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 3 அமாவாசை அன்று கோவிலுக்கு வந்து இரவு தங்கினால் முழுபலனையும் அடையலாம் என்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது.

சுயம்பு அம்பாள்

ஆதிகான் புரவடை புதுப்பூண்டி தாங்கல் ஏரிக்கரையின் கீழ்உள்ள வேப்பமரத்தடியில் புற்று இருந்தது. அவ்வழியே வருபவர்களும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்களும் புற்றை வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கிராம பெண்கள் மஞ்சள் குங்குமம் வைத்தும் வழிபட்டு வந்தனர். தோஷம் நிவர்த்தி பெற வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பெண்கள் வந்து விளக்கேற்றுவது வழக்கமாக கொண்டிருந்தனர்.

சிறுவன் கனவில் அம்பாள்

ஆதிகான் புரவடை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 15) என்ற சிறுவன் பள்ளிக்கு செல்லும்போதும் வீட்டுக்கு திரும்பி வரும்போதும் ஏரிக்கரையின் மீதுள்ள புற்றை வணங்கிவிட்டு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் அம்மன் கனவில் தோன்றி நான்தான் அங்காளம்மன் வந்துள்ளேன். புற்றின் ஓரத்தில் புதைந்துள்ளேன். என்னை வெளிக்கொண்டு வந்து புற்றின்முன் வைத்து வழிபட்டால் உன்னையும் ஊரையும் காத்து ரட்சிப்பேன் என்றும் கால்நடைகள் நோயின்றியும் விவசாயம் செழிக்கவும் செய்வேன் என்று சொல்லி ஒளிமறைந்தது. திடுக்கிட்டு எழுந்து சிறுவன் சங்கர் நடந்தவற்றை ஊரில் உள்ளவர்களிடம் கூறினான். 

அமாவாசையில் அருள்வாக்கு 

சிறுவன் சொல்லை கேட்காத கிராம மக்கள் ஏளனமாக சிரித்தனர். சில நாட்கள் கழித்து அம்மனுக்கு மேற்கூரை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்து கடப்பாறையால் குழியை தோண்டியபோது கனீர் என்ற சத்தம் கேட்டம் தோண்டுவதை நிறுத்தினர். உடனே அருகிலிருந்த சிறுவன் கைகளால் மண்ணை அள்ளியபோது அம்மனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது. சிலையை மேலே எடுத்து அபிஷேகம் செய்து புற்றின் முன் வைத்து வழிபட்டனர் ஊர் மக்கள். சிறுவன் சங்கரிடம் ஊர் பெரியவர்கள் நடந்தவற்றை மறந்துவிடுங்கள் சாமி என்று சொல்லி கோவிலை அச்சிறுவனையே பராமரிக்க முடிவு செய்து விட்டுவிட்டனர். இன்று 29 வயது ஆகும் சங்கர் சாஸ்திரிகள் ஞாயிறு செவ்வாய் வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் அருள்வாக்கு கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிகான் புரவடை அங்காளம்மன் கோயில் சிறப்புகள்

கருணை காளியம்மன்

கருமையான சருமம் சாந்தரூபம் கருணை கொண்ட பார்வையால் பக்தர்களை அப்படியே உறைய வைக்கும் காளி காளி என்ற சொல் வடமொழியில் காலா என்று அழைக்கப்படுகிறது. காளிதேவியானவள் காலத்திற்கும் மாறுதல்களுக்கும் தேவியாக கருதப்படுகிறாள் காளி என்பதற்கு காலம் மற்றும் கருப்பு என்பது பொருள் காலனின் (ஈசன்) துணைவிதான் காளி இவளே ஆதிபராசக்தி என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் சர்வசக்தி காளியம்மனாக அருள்பாலிக்கிறாள்.

பாதத்தில் மஞ்சள் கயிறு 

பரிவார தெய்வங்களாக கிழக்கு பார்த்தவாறு லட்சுமி தேவியும் சரஸ்வதியும் அன்னபூரணியும் தெற்கில் சமயபுரம் மாரியம்மனும் பெரியாச்சிஅம்மனும் அம்மனுக்கு காவலாக தெற்கே பாவாடை ராயனும்  காத்தவராயனும் வீரபத்திரனும் கிழக்கே கல்கத்தா காளியும் உள்ளார். மேற்கு பகுதியில் காலபைரவரும் கருப்பு சாமியும் காவலாக உள்ளனர். மேற்கே வக்கிரகாளியும் வாராகி அம்மனும் பிராந்தியங்கரா தேவியும்¸ வெட்காளியம்மனும்¸ விஷ்ணுதுர்க்கையும் அர்த்தநாரீஸ்வரரும் இருந்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு ஜடாமுனீஸ்வரனும் தெற்கே நாகதேவதைகளும் உள்ளனர். நான்கு திக்குக்கும் நடுவில் சுயம்பு அங்காளம்மன் இருந்து அருள்பாலிக்கிறார். மூலவருக்கு கிழக்கே படுத்தவாறு பிரமாண்ட ரூபத்தில் பெரியாயி அம்மன் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் அம்மன் பாதத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகவே உள்ளது.

1008 குட பாலாபிஷேகம்

பவுர்ணமி நாட்களில் காளியம்மனுக்கு ஆடு மாடு கோழிகள் நேர்த்தி விடப்படுகிறது. மற்ற கோவில்களில் பலியிடுவது போல் இங்கு பலியிடும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசையில் அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம் அமாவாசை அன்று காலை 8 மணிமுதல் இரவு 12 மணிவரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விசேஷங்கள் நடைபெறும். காலையில் அம்மனுக்கு 1008 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அம்பாள் சிரித்த முகத்துடனும் காட்சியளிப்பதாக உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் எல்லாம் வல்ல பிரச்சனைகளையும் தீர்ப்பாள் அம்பாள் என்பது நம்பிக்கையாகவே உள்ளது.

பால் சுறந்த பசுக்கள் 

ஆதிகான் என்பது ஆதிகாலம் என்றும்¸ புரவடை என்பது அங்காளம்மன் இருபுறமும் மனம் வீசும் என்பதை குறிக்கிறது. அங்காளம்மன் கோவில் ஆதிகாலத்தில் இயற்கை சீற்றங்களால் சிதிலமடைந்து மண்மேடாக இருந்தது. அப்போது புற்று மட்டுமே எஞ்சியிருந்தாக செவிவழி செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த புற்றுக்கு அந்த காலத்தில் பசுக்கள் வந்து பால் சுறந்ததாக இன்றளவும் கிராம மக்களால் பேசப்படுகிறது.

41 அடி காளி சிலை

இத்தகைய பழமை வாய்ந்த கோவில் பழமை மாறாமல் கருவறை கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. இத்திருப்பணியில் நீங்களும் ஒருவராக இருந்துபொருளுதவியோ பணஉதவியோ தந்து அங்காளம்மன் அருளை பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 41 அடி காளி சிலை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 6 நாள் யாக பூஜையுடன் தொடங்கி வரும் 13.06.2021 அன்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு

அங்காளம்மன் காளி சக்தி பீடம்

சங்கர் சாஸ்திரிகள்  

8610603456

6369494159

ப.பரசுராமன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!