Homeசெய்திகள்திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் செல்பி பூத் திறப்பு

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் செல்பி பூத் திறப்பு

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் செல்பி பூத் திறப்பு


திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த செல்பி பூத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.   

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் சராசரியாக 70 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பலர் வாக்களிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நகராட்சி¸ பேரூராட்சி போன்ற நகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவிதம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் பதிவான வாக்குச் சாடிவகள் கண்டறியப்பட்டு¸ அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அப்பகுதிகளுக்கு நேரிடையாக செல்லும் கலெக்டர் சந்தீப் நந்தூரி முதல் முறை வாக்காளர்கள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்¸ இளம் வாக்காளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யதால் மட்டும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது¸ அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய கவுரவம் வாக்களிப்பதாகும். என விளக்கம் அளித்து வருகிறார்.

 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழைநாரில் செய்யப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு சின்னம் பதிக்கப்பட்ட பை¸ சாவி கொத்து மற்றும் பெண் ஸ்டேன்ட் தேர்தல் விழிப்புணர்வு சின்னம் பதிக்கப்பட்ட பட்டு சேலைகளையும் கலெக்டர் வெளியிட்டுள்ளார். இதற்காக விழிப்புணர்வு குறும்படமும் ஆங்காங்கே திரையிடப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் செல்பி பூத் திறப்பு

இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. ஆர்த்தி¸ திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வி. வெற்றிவேல்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம்¸ தேர்தல் அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஆட்சியர் I am Voting on 6th April – My Vote Counts என்ற செல்பி புகைப்படம் சாவடியை (Selfie Photo Booth) திறந்து வைத்தார். அப்போது அவருடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அவர் வாக்குப்பதிவு நாள் 06.04.2021 அன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் முதல் முறை வாக்களிக்கவுள்ள இளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் செல்பி பூத் திறப்பு

இதனை தொடர்ந்து அறிவியல் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம்¸ எஸ்.ஆர்.எம். நடனப் பள்ளி குழந்தைகளின் நடனம்¸ மற்றும் கீதம் இசைக் குழுவினரின் இசைக் கச்சேரி¸ ஆகிய நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள்¸ இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து பார்வையிட்டார். 

அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாதது¸ வேலை தேடி வெளியூர் சென்று விடும் மக்கள் ஆகியவற்றால் வாக்கு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. கலெக்டரின் நடவடிக்கைகளினால் வாக்கு சதவீதம் அதிகரிக்குமா என்பது மே 2ந் தேதி தெரிந்து விடும். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!