Homeஅரசியல்பி.ஜே.பியை நைசா இங்கு நிறுத்திட்டாரா?

பி.ஜே.பியை நைசா இங்கு நிறுத்திட்டாரா?

பி.ஜே.பியை நைசா இங்கு நிறுத்திட்டாரா?

திருவண்ணாமலையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி.தினகரன்¸ திருவண்ணாமலை தொகுதியை எடப்பாடி நைசாக பி.ஜே.பிக்கு ஒதுக்கிட்டாரா?  என கேட்டார். 

தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து அமமுக பொதுச்செயளாளர் டி.டி.வி தினகரன் திருவண்ணாமலை¸ நாயுடுமங்கலம்¸கலசப்பாக்கம்¸போளுர் மற்றும் ஆரணி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு இன்று மாலை திருவண்ணாமலை அமமுக வேட்பாளர் பஞ்சாட்சரம்¸ செங்கம் தேமுதிக வேட்பாளர் அன்பு ஆகியோரை ஆதரித்து  பேசினார். 

திமுக கொள்ளை 

10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாமல் இருப்பதாலும்¸ அதிமுக கஜானாவை காலி செய்ததாலும் மக்களின் உடமைகளையும்¸ சொத்துக்களையும் திமுகவினர் கொள்ளை அடித்து விடுவார்கள் தப்பித் தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழகத்தில் கட்ட பஞ்சாயத்து¸ நில அபகரிப்பு குற்றங்கள் அதிகரிக்கும். 

இவ்வாறு பேசி வந்த டிடிவி.தினகரன் இங்கு அதிமுகவில் எந்த கட்சி கூட்டணி நிற்கிறது? என கூட்டத்தை பார்த்து கேட்டார். அதற்கு பா.ஜ.க வேட்பாளர் நிற்பதாக அமமுகவினர் கூறினர். நம்ம ஊருக்கும் பி.ஜே.பிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. பி.ஜே.பி. இங்கு இருக்கிறதா?  அதனால்தான் பழனிசாமி நைசா இந்த தொகுதியை பி.ஜே.பி.யிடம் தள்ளிவிட்டார் போலிருக்கு. பி.ஜே.பிக்கு இங்கு ஒண்ணும் வேலையில்லை. என்பது எல்லோருக்கும் தெரியும்.  பழனிச்சாமி பயந்து போய் அவங்க தலையில கட்டிடாரு என தினகரன் சிரித்துக் கொண்டே சொன்னார். 

See also  அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

ரூ.6 லட்சம் கோடி 

முதியோர் உதவித் தொகை உங்களுக்கு வருகிறதா? என கூட்டத்தினரிடம் கேட்டார். அதற்கு சிலர் வரவில்லை என்றனர். முதியோர் உதவித் தொகையே கொடுக்க முடியாதவர்கள் எப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 கொடுக்க முடியும். தி.மு.க. கூட்டணியும் ரூ.1000 கொடுப்பதாக சொல்கிறது. எங்கிருந்து கொடுக்க முடியும். தமிழகத்தை ரூ.6 லட்சம் கோடி கடனுக்கு முதல்- அமைச்சர் தள்ளி கொண்டு போய்விட்டார். 

அமமுக¸ மக்களையும்¸ நிர்வாகிகளையும்¸ கூட்டணி கட்சிகளையும் நம்பி தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிமுக யாரையும் நம்பாமல் பணமூட்டையை நம்பியே தேர்தலை சந்திக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனை எல்லாம் பாதிக்கின்ற வகையில் 2 ஆட்சிகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் தான் அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறம் தள்ளுகின்ற நிலைக்கு இருக்கிறார்கள். 

முதலீடு செய்கிறார்கள் 

தமிழ்நாடு முழுவதும் பணத்தை செலவு செய்து அணணன் பழனிசாமி¸ எம்எல்.ஏ. சீட்டுகளை பிடித்து விடலாம்  என நினைக்கிறார். ஓட்டுக்கு ரூ.1000¸ ரூ.2000 கொடுத்து ஆடு¸ மாடுகளை விலைக்கு வாங்குவதை போல் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். திமுகவும் இப்படித்தான் நினைக்கிறது. இங்கு அவர்கள் கூட்டணியில் பி.ஜே.பி நிற்கிறது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

See also  வேலுக்கு உள்ளடி வேலை செய்யும் பிரமுகர் யார்?

மக்கள் விழிப்புணர்வுவோடு இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால் முதலீடு செய்கிறார்கள் என்று அர்த்தம். பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் கஜானாவை காலி செய்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில்  நடைமுறையில் சாத்தியமானதை தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

இறைச்சி மார்க்கெட் 

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களியுங்கள். திருவண்ணாமலையில் விரிவுப்படுத்த பஸ் நிலையம் புதியதாக ஏற்படுத்தி தரப்படும். டான்காப் எண்ணெய் பிழியும் தொழிற்சாலை முடியுள்ளதை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். காந்தி நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட் அமைத்து தரப்படும். 

இவ்வாறு  அவர் பேசினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!