Homeஅரசு அறிவிப்புகள்11ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்-கலெக்டர்

11ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்-கலெக்டர்

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 11 பேர் கைது

திருவண்ணாமலை நகரில் குட்கா பதுக்கிய 2 பேர்¸ கஞ்சா விற்ற 6 பேர்¸ சாராயம் விற்ற 3 பேர் என மொத்தம் 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

டெல்டா தனிப்படை 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார்¸ நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரன்ஸ்ருதி தலைமையில் திருவண்ணாமலை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்¸ சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்  மற்றும் டெல்டா தனிப்படை போலீசார் நகரில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

திருவண்ணாமலை சிவன் பட தெருவில் உள்ள பூனம் ஸ்டோரில் நடத்தப்பட்ட சோதனையில் கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் குட்காவை மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்த திருவண்ணாமலை வேலு நகரைச் சேர்ந்த பாரஷராம் (வயது 32)¸ திருவண்ணாமலை முகல்புறாவைச் சேர்ந்த சித்திக் (38)¸ ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 11 பேர் கைது

ரூ.2 லட்சம் மதிப்பு

அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ்¸ குட்கா பொருட்கள் மற்றும் குட்காவை கடத்துவதற்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

See also  முதலமைச்சர் கோப்பை- முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு

இதே போல் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த நளினி(30)¸ சகுந்தலா(72) கலைவாணி(52)¸ அருண்குமார்(27) ¸ கௌதம்குமார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகிசிவம்(32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 6 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரே நாளில்11 பேர்

மேலும் சுமார் 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த வினோத்குமார்(34)¸ பேகோபுரம் 4 வது தெருவை சேர்ந்த வனிதா(42)¸ கல்நகரைச் சேர்ந்த தனலட்சுமி(60)  ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

குட்கா¸ கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்ற 5 பெண்கள் உள்பட 11 பேர் இன்று ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!