- அசூர முனீஸ்வரனை வேண்டிக் கொண்டு கோயிலில் தரும் பிரசாதத்தை உண்டால் ஆண் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முனீஸ்வரன் துதி:
‘ஓம்பரக்ரமாய வித்மஹே
முனீஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ முனி ப்ரசோதயாத்”
விளக்கம் : வீரர்களுக்கெல்லாம் மகாவீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே உங்களை மனமுருகி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன் – என்று 108 முறை உச்சரித்தால் பயம் விலகி பலன் கிட்டும்.
23 அடி உயர அசூர முனீஸ்வரன்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் ஆத்திப்பட்டு களர்பாளையம் எனும் அழகிய கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிராம காவல் தெய்வமான முனீஸ்வரனுக்கு கோவில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமானின் அம்சமான அசூர முனீஸ்வரன் பிரமாண்டமாக 23 அடி உயரத்தில் முகம் சிவந்து தனது கையில் நீண்ட அருவாளை வைத்துள்ளார். இவரின் வலது காலடியில் அக்னி வீரனின் தலையுடனும் இருபக்கமும் பிடாரிகளுடன் கூடிய சிங்கத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவருக்கு பிடித்த பிராந்தி பாட்டில்¸ கள்¸ பொரிகடலை¸ அவல்¸ புரை¸ வெண்பூசணி¸ எலுமிச்சை பழம்¸ கொழுக்கட்டை¸ சுண்டல்¸ வெள்ளை சாதம்¸ தேங்காய்¸ மற்றும் நாணயம் படையல் வைத்து கோவில் சார்பில் தரும் பிரசாதத்தை குழந்தையில்லாத தம்பதிகள் உட்கொண்டால் ஆண் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடையே நம்பிக்கையாகவே உள்ளது.
நேர்த்திக் கடன்
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் குழந்தையுடன் தம்பதிகள் வந்து முனீஸ்வரனுக்கு படையல் போட்டும் சிலர் ஆடி தை மாதங்களில் வந்து முடிகாணிக்கை செலுத்தியும்¸ காதுகுத்தியும்¸ வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்து வந்த பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த மறந்தால் அவர்களுக்கு நினைவுபடுத்த குழந்தைகளின் முடிகளை சடைமுடியாக மாற்றிவிடுவார் முனீஸ்வரன் என்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது. குழந்தைகளுக்கு தோஷம் நீங்க உங்களின் மடியில் படுக்க வைத்து எடுத்து பின்னர் கோவில் பூசாரி சார்பில் கையில் கயிறு கட்டினால் தோஷம் நீங்கிவிடுவது இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் முனீஸ்வரனுக்கு போடும் படையலை அவரை வணங்கி உட்கொண்டால் திருமணம் நிச்சயம் கைகூடும் என்பது கண்கூடு.
நீண்டதூரம் புறப்படுபவர்கள் வாகனத்துடன் வந்து முனீஸ்வரரை வணங்கி பயணத்தை ஆரம்பிக்கின்றனர். இந்த வழக்கம் இன்றுகூட கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் காணப்படுவது வியப்பாக உள்ளது.
குடியை மறக்க
அமாவாசையில் முனீஸ்வரன் முன்னிலையில் பச்சிலை மருந்து பூசாரி கையால் கொடுத்து கயிறு கட்டப்படுகிறது. அதையும் மீறி மது,கள் அருந்துபவர்கள் பெரும் விபத்து அல்லது சிறுவிபத்தோ ஏற்படும் என்று கோவில் பூசாரி சுதா சுவாமிகள் தெரிவித்தார். இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிலை மருந்து கொடுத்தும் கயிறு கட்டியும் உள்ளார். இதில் மதுஅருந்தி ஒருசிலர் மட்டுமே முனீஸ்வரனால் தண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஊரை காப்பாற்றுபவர்
மண் குதிரையில் முனீஸ்வரன் இரவு நேரத்தில் ஊரைச் சுற்றி வலம் வந்து காப்பதாகவும் ஊரில் இதுவரை எந்தவொரு திருட்டு சம்பவமும் நடந்ததில்லை என்றும் தவறு செய்பவர்கள் தலையில் அடிப்பவர் என்றும் நம்மோடு ஒரு மனிதனாகவே வருவார் முனீஸ்வரன் என்றும் கிராம மக்கள் போற்றுகின்றனர்.
சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி ஆவார். முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை போதித்ததால் இவரை முனீஸ்வரன் என்று அழைக்கின்றனர். கிராம மக்கள் முனி¸ முனியாண்டி¸ முனியப்பன் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகின்றனர்.
ஒளிபிழம்பாக காட்சி
ஆத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா இவர் சிறுவயது முதலே ஊரில் ஒதுக்குபுறம் ஏரிக்கரையில் உள்ள முனீஸ்வரனை வணங்க பெற்றோருடன் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசில நேரங்களில் தனியாக சென்று வணங்கி வந்தார். பின்னர் நாளடைவில் தலைமுடி சடைபோட ஆரம்பித்தது. ஒருநாள் மதிய வேளையில் முனீஸ்வரனை வணங்க தனியாக சென்றபோது பயங்கர சூறைக்காற்றுடன் வானுக்கும் பூமிக்கும் ஒளிப்பிழம்பாக காட்சி தந்து என்னை இங்கு ஏன் தேடி வருகிறாய்? உன் இடத்திலே எனக்கு கோவில் கட்டு என்று சொல்லி சுதாவின் உடம்பில் இறங்கியது. சூறைக்காற்றும் நின்று நிசப்தமானது.
கும்பாபிஷேகம்
பின்னர் நடந்தவற்றை பெற்றோரிடமும் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி தன் நிலத்திலேயே 23 அடி உயர பிரமாண்ட உருவில் முனீஸ்வரனுக்கு கோவில் கட்டினார். பின்னர் அசூர முனீஸ்வரன் என்று பெயர் சூட்டி கடந்த 12.02.2020ம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தேறியது. முனீஸ்வரன் கோவில் பூசாரியாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி வரும் பக்தர்களுக்கும் தோஷம் நீங்கவும்¸ குடியை மறக்க வருபவர்களுக்கும் எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி பச்சிலை மருந்து மற்றும் கயிறு கட்டி வருகிறார்.
பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க அமாவாசை மற்றும் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் அருள்வாக்கு கூறிவருகிறார்.
தொடர்புக்கு
அசூர முனீஸ்வரன் திருக்கோயில்
ஆத்திப்பட்டு களர்பாளையம் கிராமம்
மேல்மலையனூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
9629324837 ¸ 7539956313
–ப.பரசுராமன்