Homeஅரசு அறிவிப்புகள்சிசிடிவி மூலம் ஓட்டு பெட்டியை முகவர்கள் கண்காணிப்பு

சிசிடிவி மூலம் ஓட்டு பெட்டியை முகவர்கள் கண்காணிப்பு

ஓட்டுபெட்டி அறை-சிசிடிவி மூலம் முகவர்கள் கண்காணிப்பு 

  • திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை வளாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு குறிப்பிட்ட அலுவலர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும்¸ வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பெட்டி அறையினை சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் (தனி)¸ திருவண்ணாமலை¸ கீழ்பென்னாத்தூர்¸ கலசப்பாக்கம்¸ போளுர்¸ ஆரணி¸ செய்யாறு¸ வந்தவாசி (தனி) ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 6ந் தேதி நடைபெற்றது. 

ஸ்டிராங் ரூம் 

வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து 2885 வாக்குச் சாவடிகளிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செங்கம்¸ திருவண்ணாமலை¸ கீழ்பென்னாத்தூர்¸ கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆரணி வட்டம்¸ தச்சூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மையத்தில் போளுர்¸ ஆரணி¸ செய்யாறு¸ வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டிராங் ரூம் எனப்படும் வலுவான அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் அடுத்த மாதம் 2ந் தேதி திறக்கப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 

See also  மாணவர்களுக்காக இயக்கப்படும் கூடுதல் பஸ்களின் விவரம்

அறைக்கு சீல் 

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை வாளக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வலுவான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது¸ தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள்  அருண் கிஷோர் டோங்க்ரே¸  விஜய் குமார் மன்டிரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ தேர்தல் நடத்தும் அலுவலர்கள்¸ வேட்பாளர்கள்¸ முகவர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

3 அடுக்கு பாதுகாப்பு

பிறகு  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவு பணிகள் முடிக்கப்பட்டு¸ நேற்று இரவு முதல் 2885 வாக்குச் சாவடிகளிலிருந்து படிப்படியாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும்¸ திருவண்ணாமலை ஒழுங்முறை விற்பனைக் குழு வளாகம் மற்றும் ஆரணி தச்சூர் பல்கலைக்கழக பெறியியல் கல்லூரி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக வலுவான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மைங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டுபெட்டி அறை-சிசிடிவி மூலம் முகவர்கள் கண்காணிப்பு

சிசிடிவி கேமரா 

See also  தினம் 1000 ரூபாயுடன் அரசு குழந்தை இல்லத்தில் வேலை

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய துணை ராணுவப் படையினர் முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும்¸ தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் இரண்டாவது அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும்¸ வாக்கு எண்ணும் மையம் வெளியில் வழக்கமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வலுவான அறை முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு¸ கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும்¸ ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பாக அவர்களது முகவர் ஒருவர் வலுவான அறையினை சிசிடிவி மூலம் கண்காணிப்பதற்காக வெளியில் தனியாக பார்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிறு¸ சிறு பிரச்சனை

வாக்கு எண்ணும் மையங்களில் உள் பாதுகாப்பு வளையத்திற்குள் நியமிக்கப்பட்ட அலுவலர்கள்¸ தேர்தல் நடத்தும் அலுவலர்கள்¸ தேர்தல் மேற்பார்வையாளர்கள்¸ உயர் அலுவலர்கள் மட்டும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளே வர முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவின் போது எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வாக்குச் சாவடிகள் வெளியில் சிறு¸ சிறு பிரச்சனைகள் மட்டும் ஏற்பட்டது¸ உடனடியாக காவல் துறை மூலம் சரி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் வாக்குப் பதிவு நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.

See also  பவுர்ணமி: 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி

இவ்வாறு அவர் கூறினார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!