Homeசெய்திகள்ஜவுளி கடை மூடல்¸பஸ் பறிமுதல்-கலெக்டர் அதிரடி

ஜவுளி கடை மூடல்¸பஸ் பறிமுதல்-கலெக்டர் அதிரடி

ஜவுளி கடை மூடல்¸பஸ் பறிமுதல்-கலெக்டர் அதிரடி

செங்கத்தில் இன்று திறக்கப்பட்ட துணிக்கடையை மூடவும்¸ அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்சையும் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். 

நேரில் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம்¸ செங்கம் சுகாதார வட்டம்¸ பெரும்பாக்கம்¸ ஊராட்சி¸ சேரந்தாங்கல் கிராமம் மற்றும் செங்கம் பேரூராட்சி¸ மில்லத் நகர்¸ ஆகிய  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (26.04.2021) மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ வட்டார மருத்துவ அலுவலர்¸ வட்டாட்சியர்¸ வட்டார வளர்ச்சி அலுவலர்¸ மருத்துவர்கள்¸ சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

அதிகளவு பரிசோதனை 

செங்கம் சுகாதார வட்டம்¸ பெரும்பாக்கம் ஊராட்சி¸ சேரந்தாங்கல் கிராமத்தில் 8 நபர்களுக்கும்¸ செங்கம் பேரூராட்சி¸ மில்லத் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களுக்கும்¸ கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு¸ அரசு மருத்துவமனை மற்றும் கோவிட்-19 பராமரிப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு¸ பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளவும்¸ காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் கேட்டுக்கொண்டார்.

ஜவுளி கடை மூடல்¸பஸ் பறிமுதல்-கலெக்டர் அதிரடி

புதிய ஜவுளி கடை

See also  200 வருடம் பழமையான கோயிலை இடிக்க எதிர்ப்பு

செங்கம் மில்லத் நகர் பிரதான சாலையில் சிவானி என்ற பெயரில் புதியதாக ஜவுளி கடை இன்று திறக்கப்பட்டது. தடபுடலாக திறக்கப்பட்ட இந்த கடையில் ரூ.1000த்திற்கு மேல் துணி வாங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கடையில் அதிக அளவில் கூட்டம் திரண்டது. அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் காரை நிறுத்த சொல்லி கடைக்குள் சென்றார். 

கடையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றாதிருப்பததை பார்த்து அந்த கடையை மூடும்படி உத்தரவிட்டார் மேலும் கடையில் குளிர்சாதனம் பயன்படுத்தியதால் அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். 

ஆய்வுக் கூட்டம் 

பிறகு மாவட்ட ஆட்சியர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை¸ வருவாய்த் துறை¸ ஊரக வளர்ச்சித் துறை¸ பேரூராட்சிகள் துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி¸ கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள்¸ முகக்கவசம் அணிவது¸ சமூக இடைவெளி கடைபிடிப்பது ஆகியவை கடுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும்¸ அபராதம் விதிக்கவும் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து¸ பரிசோதனைகள் அதிகரிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

See also  கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்

எஸ்.டி.எம்.எஸ் பஸ் 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செங்கம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில்¸ கோணக்குட்டை கேட் அருகில் சென்ற போது¸ எதிரில் திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்த எஸ்.டி.எம்.எஸ் என்ற தனியார் பஸ்¸ அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றதால் வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவர் – கண்டக்டர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யவும்¸ அந்த பஸ்சில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ 

ஜவுளி கடை மூடல்¸பஸ் பறிமுதல்-கலெக்டர் அதிரடி

கட்டுபாட்டு மையம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை தினமும் 1500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது¸ தற்போது 2000-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கோவிட்-19 கட்டுபாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 சிகிச்சைக்காக 1500 படுக்கை வசதிகள் இருந்த நிலையில்¸ சேத்பட்¸ ஆரணி¸ எஸ்.வி.நகரம் உட்பட பல்வேறு இடங்களில் புதிய பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்க 2000 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

See also  வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

காட்டாம்பூண்டியில் அதிகம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டாம்பூண்டி சுகாதார வட்டம்¸ செங்கம் சுகாதார வட்டம் போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்தவர்கள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. 

கோவிட்-19 சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவர்கள்¸ மருந்துகள்¸ ஆக்ஸிஜன்¸ மருத்துவமனைகள்¸ பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் தினமும் 20 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்¸ தற்போது தினமும் 300லிருந்து 350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!