Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் தாரா அபிஷேகம்

அண்ணாமலையார் கோயிலில் தாரா அபிஷேகம்

அக்னிலிங்கம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அந்தரத்தில் தொங்க விடப்பட்ட பாத்திரத்திலிருந்து வாசனாதி திரவியங்கள் கலந்த நீர் சிவலிங்கத்தின் மீது விடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. – கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்திற்கும்  அக்னி நட்சத்திர தோஷம் நீங்க அபிஷேகம் நடந்தது.  

அக்னி நட்சத்திரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று அக்னி நட்சத்திரம் பிறந்ததையொட்டி  தாரா அபிஷேகம் நடைபெற்றது.

அனைத்து கிரகங்களுக்கும் ஒளிதரும் தெய்வமான சூரிய பகவான் மேஷத்தில் உச்சம் பெற்ற சித்திரை மாதத்தில் பரணி நாலாம் பாதத்தில் தொடங்கி ரோகினி முதல் பாதம் வரை சஞ்சரிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்று சாஸ்திரம் கூறுகிறது .

தனது பிணியை போக்கிட அக்னி பகவான் மூலிகைகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்ணதாகவும்¸ அதற்கு கண்ணனும்¸ அர்ச்சுனனும் மழை பொழியாமல் தடுத்து உதவி செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அடர்ந்த காட்டை அவர் உட்கொண்டதால் வெப்பம் அதிகரித்தது. அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் எனப்படுகிறது. 

அண்ணாமலையார் கோயிலில் தாரா அபிஷேகம்

தோஷ காலம்

See also  திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை சனி பிரதோஷம்

பொதுவாக இந்த அக்னி நட்சத்திர நாள் தோஷ காலமாக தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்நாளில் சில சுப காரியங்களை தமிழக மக்கள் செய்ய மாட்டார்கள். சிவாலயங்களில் இறைவனை குளிர்விப்பதற்காகவும்¸ தோஷங்கள் தீரவும் ஜலதாரை(தாரா) வைப்பார்கள். அதன்படி லிங்கத்தின் மீது பானை வடிவில் பாத்திரம் தொங்க விடப்பட்டு அதில் பன்னீர் உள்பட பல்வேறு பொருட்ளை போடப்படும். பிறகு பாத்திரத்தில் சிறு துளையிட்டு நீர் சிவலிங்கத்தின் விழும்படி செய்வார்கள். இதன் மூலம் இயற்கை சீற்றங்கள் ஏற்படாது என்பதும்¸ நோய்¸ நொடிகள் தீரும் என நம்பப்படுகிறது. 

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர பிறப்பையொட்டி இன்று உச்சி கால அபிஷேக வேளையில் மூலவரான அண்ணாமலையாருக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வாசனாதி திரவியங்கள்

அதனைத்தொடர்ந்து அண்ணாமலையாரின் சிரசின்மேல் வெள்ளியிலான தாரா பாத்திரம் தொங்கவிடப்பட்டு அதில் சுத்தமான பன்னீர்¸ வெட்டிவேர்¸ லவங்க பொடி¸ கிராம்பு பொடி¸ ஜாதிபத்திரி பொடி¸ தாளிசாதி இலை பொடி பச்சைக் கற்பூரப் பொடி ¸மற்றும் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்டது. அந்த நீர் அண்ணாமலையாரின் சிரசில் சிறு சிறு துளிகளாக விடப்பட்டது. அண்ணாமலையாரை குளிர்விப்பதற்காக இம்முறை காலம்¸ காலமாக செய்யப்பட்டு வருகிறது. 

அண்ணாமலையார் கோயிலில் தாரா அபிஷேகம்

அக்னி லிங்கம் 

See also  திருவண்ணாமலை:விஜயநகர பேரரசு கால சிவன் கோயில்-கண்டு கொள்ளாத அறநிலையத்துறை

இன்று தொடங்கி வருகிற 29ந் தேதி வரை இந்த அக்னி நட்சத்திர தாரா அபிஷேகம் நடைபெறும்.  இதே போன்று அண்ணாமலையார் கோவிலின் கட்டுப்பாட்டில் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் ¸ திருநேர் அண்ணாமலை¸ ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் சூரிய,சந்திர லிங்கங்களுக்கும் தாரா அபிஷேகம் நடைபெற்றது. அஷ்ட லிங்கங்களின் இரண்டாம் லிங்கமான அக்னி லிங்கத்திற்கு தாரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!