Homeசுகாதாரம்காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை

காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை

காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் மருத்து காப்பீடு திட்டத்தில் 4 மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என்றும்¸  கூடுதல் கட்டணம் வசூலித்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும்  கலெக்டர் அறிவித்துள்ளார். 

தனியார் மருத்துவமனை

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குனர் கண்ணகி¸ முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ஆனந்தராஜ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ரங்கம்மாள் மருத்துவமனை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பொதுமக்களின் நலன் கருதி 4 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்கை அளிக்க அனுமதி வழங்கப்படுள்ளது. அதன்படி¸ ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை¸ அருணை மருத்துவமனை¸ ராஜி மருத்துவமனை மற்றும் புனித தாமஸ் மருத்துவமனை¸ சேத்துப்பட்டு ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.

காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை

வெண்டிலேட்டர் வசதி

மேற்கண்ட தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்¸ ஒரு  நாள் சிகிச்சை கட்டணமாக¸ தீவிரம் இல்லாத (ஆக்சிஜன் உதவி இல்லாமல்) கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.5000-ம்¸ ஆக்சிஜன் உதவியுடன் தீவிரம் அல்லாத கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.15000-ம்¸ வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.35¸000-ம்¸ ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.30,000-ம்¸ தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஆக்சிஜன் உதவியுடன் படிப்படியாக குறைக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.25000-ம் வழங்கப்படும்.

கட்டணமில்லா தொலைபேசி

தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட¸ தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் பெறுவது குறித்த புகார்களை 1800 425 3993  மற்றும் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணி நேரமும்  பொதுமக்கள் அளிக்கலாம் என்றும் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!