Homeஆன்மீகம்உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

கர்ம வினைகளை தீர்த்து சகல வரங்களையும் தரும் மேகல சின்னம்பள்ளி அகத்தியர் கோயிலில் திருவண்ணாமலையிலிருந்து சென்ற நிர்வாண சாமியார் தங்கி உணவின்றி வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

அகத்தியர் கோயில் 

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் செல்லும் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த மேகல சின்னம்பள்ளி எனும் புனித தலத்தில் மாந்தோப்புகளுக்கும் தென்னந்தோப்புகளுக்கும் மத்தியில் ஸ்ரீமத் அனுமந்தாச வளாகத்தில் சப்தரிஷிகளில் ஒருவராகவும் 18 சித்தர்களின் முதன்மையான அகத்தியருக்கு கோயில் உள்ளது. இத்தலத்தில் கிழக்கு பார்த்தவாறு அனந்தவல்லி தாயாருடன் அகத்தீஸ்வர சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

குழந்தை பாக்கியம்

இவருக்கு பிடித்த பச்சைநிறம் வஸ்திரம் சாற்றி¸ செவ்வாழை¸ பஞ்சாமிர்தம்¸ சர்க்கரை பொங்கல்¸ இளநீர் போன்றவற்றுடன் பூஜை செய்து நிறைவாக ஓம்ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்து இங்கு தரும் தீர்த்தத்தை உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும் என்பதும் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் இத்தலத்தின் ஐதீகமாகவே உள்ளது. மேலும் கல்வியில் சிறக்கவும் செல்வவளம் பெருகவும் கடன் பிரச்சனை தீரவும் கோர்ட்டு வழக்குகளில் இருந்து விடுபடவும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும் இங்குள்ள சித்தர்களை வணங்க தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா புதுவை மற்றும் வெளிநாட்டினரும் வந்து சித்தர்களை வணங்கி அளவில்லா அருளை பெற்று செல்கின்றனர்.

அகத்தியர் மீது சூரிய ஒளி

இத்தலத்திலுள்ள அகத்தியருக்கு 5 கால பூஜை தினந்தோறும் நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் பூஜையின்மீது சூரிய ஒளி மூலவர் மீது விழுவது இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

See also  திருவண்ணாமலை கோயிலுக்கு 7 புதிய திருக்குடைகள்

நிர்வாண சாமியார்

அகில உலகத்தையும் காத்தருளும் திருவண்ணாமலை சிவனின் அருளால் இந்த கிடைக்கதற்கரிய மானுட பிறவியில் அவனருளால் சிவனை நினைத்து நினைத்து தியானம் செய்து மக்களுக்காக தொண்டாற்றியவர்களை அவ்இறைவனுக்கு சமமானவர்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. அந்த வகையில் சென்னை சேத்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தனது ஆன்மீக தேடலை தொடங்கிய மவுன சுவாமிகள் திருவண்ணாமலையில் 5 ஆண்டுகள் தங்கி கிரிவலம் வருவதும் சிவனை நினைத்து தியானம் செய்ய காட்டுப்பகுதியான காட்டு சிவா தியான மண்டபத்தில் தியானம் செய்து வந்தார்.

உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

துவாரத்தின் வழியே ஆசி

பிறகு மவுன சுவாமிகள் அகத்திய சித்தர் ஈர்ப்பால் மேகல சின்னம்பள்ளிக்கு வந்து தங்கி நிர்வாண நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஒன்றரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து வரும் பக்தர்களுக்கு துவாரத்தின் வழியே நீண்ட தாடியுடன் தனது தீட்சன்ய பார்வையில் அருளாசியும் வழங்கியும் வருகிறார். பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நோட்குறிப்பில் எழுதி அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார்.

அமானுஷ்ய சக்தி

சுவாமிகள் உணவருந்தாமலும் தண்ணீர் குடிக்காமலும் பனைவெல்லததை மட்டுமே சாப்பிடுவதாக கோவில் நிர்வாகி அகத்திய சரவணன் சுவாமிகள் தெரிவித்தார். மேலும் அவர் சுருட்டு பிடிப்பதால் சுருட்டு சாமியார் உள்பட இன்னும் பல பெயர்களில் பக்தர்கள் அழைக்கின்றனர். சுவாமிகள் கிராமத்துக்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பதைப் போலத்தான் கிராம மக்கள் பார்த்தனர். ஆனால் அவருடைய அமானுஷ்ய சக்திகளை அறிந்த பிறகு சித்தரை அவதார புருஷராக அப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கி வருகின்றனர்.

See also  பவுர்ணமி அன்னாபிஷேகம்-திருவண்ணாமலையில் அலைமோதிய கூட்டம்

கனவில் தோன்றிய அகத்தியர்

திருவண்ணாமலை அருகே உள்ள தேனிமலையில் நவகோடி சித்தர்கள் வாசம் செய்து வருகின்றனர். அவர்கள் அண்ணாமலையாரிடம் யாகம் நடத்த இடம் தேவையென்று கேட்ட போது அண்ணாமலையாரால் சுட்டிக் காட்டப்பட்ட இடம்தான் இந்த அகத்தீஸ்வரர் கோயிலாகும். பொதுவாக அகத்தியர் கோயில் உருவாக வேண்டும் என்றால் அந்த இடத்தில் அகத்திய மாமுனிவர் 12 வருடங்கள் தவம் புரிந்திருக்க வேண்டும் அல்லது தங்கியிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான அகத்தீஸ்வரர் கோயில் உருவாக முடியும். அதன்படி சரவணன் சுவாமிகளின் கனவில் தோன்றிய அகத்திய சித்தர் சொல்லியபடியும்¸ ஓலைச்சுவடிகள் மூலமாகவும் அறிந்து மேகல சின்னம்பள்ளியில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அகத்திய கோவிலை சுற்றி 143 மகான்களின் ஜீவசமாதி உள்ளதாகவும் அவர்கள் பாம்பு ரூபத்திலும் பறவை ரூபத்திலும் அகத்தியரை சுற்றி வருவதாகவும் இது ஞான பூமியாக விளங்குகிறது என்றும் கோயில் நிர்வாகி அகத்திய சரவணன் சுவாமிகள் தெரிவித்தார்.

காட்சி தரும் சித்தர்கள்

18 சித்தர்களின் முதல் சித்தரான அகத்தியருக்கு முன் அகத்திய கணபதி¸ போகர்¸ திருமூலர்¸ மச்சமுனி¸ பாம்பாட்டி, கருவூரார்¸அகப்பேய்¸ தேரையர், புண்ணாக்கீசர், காளங்கி, கமலமுனி, நந்தீசர், சடடை நாதர்¸ கொங்கணர், கோரக்கர்¸ சிவவாக்கியர் ஆகிய சித்தர்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். மேலும் கோவிலை சுற்றி விநாயகர்¸ பாபா¸ சப்தகன்னிகள் ராகவேந்திரர்¸ ஆஞ்சநேயர்¸ காலபைரவர்¸ சுப்பிரமணி சுவாமி என காணக்கிடைக்காத அற்புத தெய்வங்களும் நம்மை வரவேற்று அருள்பாலிக்கிறார்கள்.

உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

மூலிகை கஞ்சி¸ மூன்றுவேளை சாப்பாடு

தினந்தோறும் காலையில் அகத்தியருக்கு படைத்து மூலிகை கஞ்சி மினி லாரியின் மூலம் உழவர் சந்தை¸ அரசு மருத்துவமனை மற்றும் வழிதோறும் உள்ள கிராமங்களுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி அகத்திய சரவண சுவாமிகள் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் வரும் பக்தர்களுக்கும் சாது சன்னியாசிகளுக்கும் காலையில் டீ¸ டிபன்¸ மதிய சாப்பாடு இரவு டிபன் என 300 பேர் முதல் 400 பேருக்கு தினந்தோறும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது.

See also  காலை முதல் மாலை வரை அமைச்சர் சேகர்பாபு சுற்றுப்பயணம்

திருவிழாக்கள்

ஆனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் கோவில் வருஷாபிஷேகமும்¸ மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அகத்தியர் குருபூஜை பெருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை காண இமயமலை கன்னியாகுமரி மதுரை கோவை திருச்சி ராமேஸ்வரம் ஆந்திரா கேரளா கர்நாடகா என பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் கலந்து கொள்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வரும் சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையில் வஸ்திர தானமும் ஜோல்னா பை மற்றும் காணிக்கை கொடுக்கப்படுகிறது. மேல் அன்றாடம் வரும் சாதுக்களுக்கு தங்க இடமும் உணவும் பயணப்படியும் 200 முதல் 2000 வரை வழங்கப்படுகிறது.

அமைவிடம்

கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் செல்லும் சாலையில் மேகல சின்னம்பள்ளி கிராமத்தில் அகத்தியர் கோவில் உள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பஸ் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

தொடர்புக்கு

அருள்மிகு அனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்

ஸ்ரீமத் அனுமந்த தாச வளாகம்

மேகல சின்னம்பள்ளி கிராமம் மற்றும் அஞ்சல்

கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழ்நாடு 635 120

செல் : 9500611233¸ 9715673777¸ 7598773777

– ப.பரசுராமன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!