Homeஆன்மீகம்மதுரை தோற்றத்தில் மதுராம்பட்டு மீனாட்சி அம்மன்

மதுரை தோற்றத்தில் மதுராம்பட்டு மீனாட்சி அம்மன்

மதுரை கோயில் தோற்றத்தில் மதுராம்பட்டு மீனாட்சியம்மன் 

2 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய திருவண்ணாமலை-மதுராம்பட்டு மீனாட்சி அம்மன் கோயில் மதுரையில் உள்ள தோற்றத்தில் அமைந்து சிறப்பு பெற்று விளங்குகிறது. 

புதன் ஆதிக்கம் நிறைந்த இக்கோயிலை திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவபக்தர் புனரமைத்து வருகிறார்.  

சுந்தர சொக்கநாத பெருமான்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த  வயல்களுக்கு மத்தியில் மதுராம்பட்டு என்னும் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்களால் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கம்பீரமாக லிங்கசொரூபத்தில் மீனைப் போல கண்களையுடைய அன்னை மீனாட்சியுடன் சுந்தர சொக்கநாத பெருமான் என்ற பெயரில்அருள்பாலிக்கிறார். 

இவர்கள் இருவரையும் மாணவர்கள் மனதார நினைத்து மண்டியிட்டு வணங்கினால் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. அப்படி கிடைக்கப் பெற்றவர்கள் சுந்தர சொக்கநாதருக்கும் மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து புதுவஸ்திரம் சாற்றி வேண்டுதலை நிறைவேற்றுவது இத்தலத்தின் ஐதீகமாகஉள்ளது.

சுற்றுப்புற கிராம மக்கள்

சுமங்கலி பெண்கள் மீனாட்சி அம்மனை தொடர்ந்து வேண்டி வழிபட்டு நீண்ட ஆயுள் பெறுவதாகஅம்மன் மீது பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை உள்ளது. குழந்தை பாக்கியம் திருமணத் தடை நீங்கவும்¸ கடன் பிரச்சனை தீரவும் விவசாயம் செழிக்கவும் விளைச்சல் பெருகவும் நோயின்றி வாழவும் அம்மனுக்கு விளக்கேற்றி சுற்றுப்புற கிராம மக்கள் வழிபடுகின்றனர் இங்கு தலவிருட்சமாக வில்வமும் தீர்த்தமாக சிவதீர்த்தம் உள்ளது. 

See also  கிரிவலப்பாதை:30 சிலை உள்ள கோயில்- ஒரு சிலையால் சர்ச்சை

வழிபட்ட முனிவர்கள் 

வியாக்கரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் இனிய நண்பர்கள்ஆவார்கள். இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பூஜித்து வழிபடுவது வழக்கம். அதன்படி தில்லைக் கூத்து நடராஜ பெருமானை வழிபட்டுஅருள் பெறுவதற்கு முன் சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும் மதுராம்பட்டில் அம்மை அப்பராக எழுந்தருளியுள்ளனர் என்பதை அறிந்த வியாக்கரபாதரும் பதஞ்சலி முனிவரும் லிங்க திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அவரை துதித்து பாடி அளவில்லா ஆனந்தத்துடன் சென்றார்கள் என்பது செய்தியாகும். 

கல்வெட்டு ஆதாரங்கள் 

2000 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் புகழ் பெற்று வளங்கியுள்ளது. கோவிலை சோழர்களுக்கு பிறகு பல சிற்றரசர்களும் திருப்பணி செய்யுள்ளதாக கல்வெட்டு ஆதாரங்கள் கோவில் முன் மண்டபத்தில் உள்ளது. மேலும் பல சித்தர்கள் இன்னும் கூட சொக்கநாதரை இரவு நேரத்தில் பூஜிப்பதாகவும் கோவிலை சுற்றி  சித்தர்கள் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள  366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கெல்லாம்  மூலக்கோயில் மதுரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

சொர்ணசித்தர் ஜீவசமாதி 

பலநூறு ஆண்டுகளுக்கு முன் செர்ணசித்தர் என்பவர்  கோவிலில் தங்கி பூஜை  செய்து வந்தார். இவர் அஷ்டமாசித்து பெற்ற வரும் ரசவாத கலையில் தேர்ச்சி பெற்றவராவார். அவர் இங்கு ஜீவசமாதியாகியுள்ளார் என்பதால் இவ் ஆலயம் புனரமைப்பு செய்யும் காலத்தில் கூட அஸ்திவாரம் பழுது ஏற்படாமல் திருப்பணி செய்யப்பட்டது. 

மதுரை கோயில் தோற்றத்தில் மதுராம்பட்டு மீனாட்சியம்மன்

சொக்கிய சொக்கநாதர்

See also  சிதலமடைந்த 1000 வருட பெருமாள் கோயில்

அன்னை மீனாட்சியின் கண் அழகில் சொக்கியதால் சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டார் ஈசன். மீனைப் போல கண்களை உடையவள் என்பதால் அன்னையின்  அழகில் சொக்கி  மதுரை மாப்பிள்ளையானர் சொக்கநாதர்  உலக சக்தியாய் நிற்கும் மஞ்சள் குங்குமம்  நிறைந்த மதிமுகம்  கொண்ட அந்த சொக்கநாதபெருமான்  மதுரையைப் போல் மதுராம்பட்டிலும் அருள்பாலிப்பது வியப்பாக உள்ளதை பார்ப்போம்.

புதன் ஆதிக்கம் நிறைந்தது 

எல்லா கோவில்களிலும்  சுவாமிக்கு இடதுபுறம் அம்பாள் அருள்பாலிப்பது ஆகம விதியாகும்.   ஆனால் விதிவிலக்காக சில கோவில்களில் மட்டும் அதாவது மதுரையாம்பதியில் அமைந்துள்ளதை போல் மதுராம்பட்டிலும்  வலதுபுறம்  திருமணக் கோலத்தில் அமைந்துள்ளது. மதுராம்பட்டில் வலதுபுறம்  திருமணக் கோலத்தில் அம்மாளும் இடதுபுறம் சுவாமியும்  அருள்பாலிப்பது இத்தலத்தின்  சிறப்பாக கருதப்படுகிறது.  ஒருவரின்  தலையெழுத்தை மாற்றியமைக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாகவும் அன்னை மீனாட்சி அருள்பாலிப்பதால் புதன் ஆதிக்கம் நிறைந்த தலமாகவும் கருதப்படுகிறது. எல்லைக் காவல்தெய்வமாக விநாயகரும்  துர்க்கையம்மனும் உள்ளனர்.

புதிய தொற்று நோய்கள்

ஜாதகத்தில் புதன் ஆதிக்கம் குறைந்தவர்களுக்கு கடன்களாலும்¸ நோய்களாலும் தொல்லை உண்டாகும். நரம்பு பிரச்சனைகளும் ஏற்படும். பகை கிரகத்தின் பார்வையை புதன் பெற்றிருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்க கூடும். இதற்கெல்லாம் பரிகார தலமாக இக்கோயில் விளங்குவதால் நோய்¸ நொடி இன்றி வாழ பக்தர்கள் விளக்கேற்றி வணங்கி விட்டு செல்கின்றனர்.  

See also  செல்போன் வெளிச்சத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

சிதிலமடைந்த கோவில் 

நாடாண்ட மன்னர் இறை வழிபாட்டை உணர்ந்து  குமரி முதல் இமயம் வரை கோவில்களை கட்டினர். வருபவர்கள். பசிப்பிணி தீர்க்க  தர்மசாலைகள் அமைக்கப்பட்டது. ஆங்காங்கே பாராயணம் படிக்கப்பட்டது. அன்னியர் படையெடுப்பின்  போது பல கோவில்கள் சூறையாடப்பட்டு தங்கம்¸ வெள்ளி¸ ஐம்பொன்  சிலைகளும்  கொள்ளையடிக்கப்பட்டு பல கோவில்கள் தரைமட்டமானது.  சிதிலமடைந்த அப்படி அன்னியர் படையெடுப்பின் போது சிதிலமடைந்த கோவில்களில் மதுராம்பட்டில் உள்ள சுந்தரசொக்கநாதர் கோவிலும் ஒன்று.  இந்த கோவில் ஏற்கனவே வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதன்பிறகு கவனிப்பாரற்று இருந்ததால் கோயிலின் பெரும் பகுதிகள் சிதிலமடைந்துள்ளது. 

மதுரை கோயில் தோற்றத்தில் மதுராம்பட்டு மீனாட்சியம்மன்

சிவபக்தர் பழனியப்பன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவபக்தரான பழனியப்பன்  என்பவர்  எந்தவித எதிர்பார்ப்புமின்றி  பாலாலயம் செய்து திருப்பணி வேலையை  முழு மூச்சாக செய்து வருகிறார்.  இத்தகைய பழமை வாய்ந்த கோவில் திருப்பணியில் நீங்களும் ஒருவராக  இருந்து  பொருளுதவியோ அல்லது பணவுதவியோ தந்து சிவன் அருள் பெருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: சி. சிவபழனியப்பன்  செல்; 9443810512¸ 8838269710

அமைவிடம் :திருவண்ணாமலையில்   இருந்து  விழுப்புரம் செல்லும்  வழியில் உள்ள தலவாகுளத்தில் இருந்து 12  கி.மி  தூரமாகும்.

திருவண்ணாமலை  இருந்து திருக்கோவிலூர்  வழியில் உள்ள வெறையூரில்   இருந்து  10  கி.மி  தூரத்தில் மதுராம்பட்டு சுந்தரசொக்கநாதர் கோவில் உள்ளது.

ப.பரசுராமன்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!